20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு
Spread the love

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு

இலங்கையில் இந்த ஆண்டு பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இருபதாயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான பால் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) நிவர்த்தி செய்வதற்கான பல்துறை தேசிய செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு

செயலமர்வில் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் வைத்தியர் நெதாஞ்சலி மபிடிகம, இலங்கையில் கர்ப்ப காலத்தில் அதிகளவாக பெண்கள் வன்முறைக்கு ஆளாகின்றனர் என தெரிவித்தார்.

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு

இந்த நிகழ்ச்சியானது பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் தலைவி வைத்தியர் சுதர்ஷினி

பெர்னாண்டோபுள்ளே மற்றும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவி திருமதி தலதா அத்துகோரள ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைத் தடுப்பதற்கு இந்தத் திட்டங்கள் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகத்தின் முன்முயற்சியின் கீழ், 18 துறைகளில் கவனம் செலுத்தும் 13 அமைச்சகங்களின் பாடத்திட்டங்கள் தொடர்பாக இந்த பல்துறை தேசிய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP) பாலின ஆலோசகர் திருமதி ஸ்ரீயானி பெரேரா மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆலோசகர் கலாநிதி லக்ஷ்மன் சேனாநாயக்க ஆகியோர் பாலியல் மற்றும்

பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) நிவர்த்தி செய்வதற்கான தேசிய செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களை விரிவாகக் கூறினர்.

செயலமர்வில் பங்குபற்றிய தரப்பினர் இந்த தேசிய செயற்திட்டத்திற்கு தமது புதிய யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.