20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

Spread the love

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

புதிதாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச இருபதாவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள சுயாதீன

ஆணைக்குழு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சுயாதீனம் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் ஆணைக்குழு எந்த வகையிலும் சுயாதீனம் அற்றது என்றும் அமைச்சர் கூறினார்.

கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவில் 10 – 7 பேர் அங்கத்துவம் வகிக்கின்றனர். ஜனாதிபதி, பிரதமர் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சார்பில்

இவர்கள் பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர். இதிலும் பிரச்சினை உண்டு. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிலும் பிரச்சினை உண்டு. ஆணைக்குழுவில் இருந்து பொலிஸ்மா அதிபர் வெளியேறிய

பின்னர் சட்டத்தை எவ்வாறு வளைப்பது என்று எமக்கு தெரியம் என்று கூறியுள்ளார்.

அப்படியானால் இதன் சுயாதீன தன்மையிலும் பிரச்சினை உண்டு. தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதில் 3 #

அங்கத்தவர்கள் உள்ளனர். இதுபோன்ற விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் கூறினார்.

19 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள முக்கிய விடயங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய அரசியல் யாப்பில் திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என்றும் அமைச்சர்

கூறினார். அமைச்சரவை யாப்பு திருத்தம் தொடர்பில் அமைச்சரவை ஆவணம், குறிப்புக்கள் முதலானவற்றை பரிசோதனை செய்வதற்கும், சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்குமாக

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலீஸ் சப்ரி உள்ளிட்ட அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியல் யாப்பு அல்லது தற்பொழுது உள்ள அரசியல் யாப்பில் திருத்தத்தை மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந்தோம். இது தொடர்பில்

மக்களுக்கு நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக அமைந்துள்ளது. பொது மக்கள் இதனைப் புரிந்து கொண்டு 3 இல் 2

பெரும்பான்மை ஆணையை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளனர். இந்த விடயங்களை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் அகும்.

புதிய திருத்தத்தில் அல்லது யாப்பில் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வோம். தற்பொழுது உள்ள ஜனாதிபதி பதவி தொடர்பிலான கால எல்லையை 5 வருடமாகவே முன்னெடுப்போம்.

ஜனாதிபதி ஒருவர் 2 முறைக்கு மேற்படாத வகையில் பதவி வகிப்பதற்கான காலத்தை அவ்வாறே செயற்படுத்தப்படுவதை உறுதி செய்வோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply