12 வயது சிறுமி மாயம்- தேடும் பொலிஸ்

Spread the love

12 வயது சிறுமி மாயம்- தேடும் பொலிஸ்

சகல பிள்ளைகளும் வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது, 12 வயதான சிறுமியொருவர் காணாமற் போய்விட்டார் என, கம்பளை மற்றும் கலஹா பொலிஸ்

நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கம்பளை நில்ஓய காரியாலய சந்திப் பிரதேசத்தில் வசிப்பிடமாகக் கொண்ட யோகராஜா கலைவாணி என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார். இவர், பாடசாலை மாணவியாவார்.

சின்ன அம்மாவின் வீட்டுக்குச் சென்றிருந்த போதே, இவ்வாறு காணாமற் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தந்தையான கதிர்வேல் யோகராஜா, கண்டி பொதுச் சந்தையில் கடமையாற்றுகின்​றார், தாய், தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்குச் சென்றிருந்துள்ளார்.

அதனால், அவர்களின் பிள்ளைகள் மூவரும், சின்ன அம்மாவின் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

சின்ன அம்மாவின் பிள்ளைகள் இருவரும், இந்த சிறுவர்கள் மூவரும், இணைந்து ​விளையாடி கொண்டிருந்துள்ளனர். அவ்வாறு விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளிடம், பாடம் கற்கவேண்டுமென சின்ன அம்மா எச்சரித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், கடந்த 7 ஆம் திகதி இரவு, தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த போதே, பிள்ளை காணாமல் போனமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, சிறுமியை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிராமத்தவர்கள் அனைவரும் இணைந்து அருகிலிருக்கும் வீடுகள் மற்றும் பிரதேசங்கள், பற்றைக்காடுகளில் தேடியுள்ளனர். சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்காமையால், சின்ன அம்மாவான பீ. நா​கேஸ்வரி, சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரைந்து செயற்பட்ட ​பொலிஸார், பொலிஸ் நாயின் உதவியுடன் சிறுமியை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். நேற்று (08) வரையிலும் அச்சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை.

பொலிஸ் நாய், கிராமத்திலிருந்து பிரதான வீதி வரையிலும் வந்து, நின்றுக்கொண்டது. இதனால், பொலிஸார் தமது விசாரணைகளை திசை திருப்பிவிட்டுள்ளனர்.

    Leave a Reply