வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்

Spread the love

வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்

உத்திரகாண்டில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீஸ் அவர்களை ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர்.

ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் – ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ்
தண்டனை பெற்ற வெளிநாட்டினர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி

செய்யபட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால், பொதுமக்களில் சிலர் ஊரடங்கை மீறி அத்தியாவசிய

காரணங்கள் அல்லாமல் சாலைகளிலும், பொது இடங்களிலும் சென்ற வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்கும் போலீசார் அவர்கள் மீது குற்றங்களுக்கு ஏற்றார்போல் வழக்குகளும் பதிவு செய்து சிறையிலும் அடைக்கின்றனர்.

அதேபோல் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்களுக்கு போலீசார் நூதனை தண்டனைகளும் வழங்குகின்றனர்.

அவ்வாறான ஒரு சம்பவம் உத்திரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், அங்கு ஊரடங்கை மீறியவர்கள் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.

தண்டனை பெற்ற வெளிநாட்டினர்

உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்று போலீசார் ரோந்து பணியில்

ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கு உத்தரவை மீறி

கங்கை நதிக்கரையோரம் சுற்றித்திரிந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளிநாட்டினர் 10 பேரும் ஊரடங்கை மீறி கங்கையை சுற்றிப்பார்க்க வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் 10 பேரிடமும் ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து

விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர்.

தாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக போலீசார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்ற 500

முறை ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து

விடுங்கள்’ என எழுதி கொடுத்தனர். இதையடுத்து அந்த வெளிநாட்டினரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

வெள்ளைக்கார பெண்களுக்கு
வெள்ளைக்கார பெண்களுக்கு

Leave a Reply