வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் மரணம் – தொடரும் மீட்பு

Spread the love

வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் மரணம் – தொடரும் மீட்பு

களனி கங்கை களுகங்கை, ஜின் கங்கை, மகா ஓயா மற்றும் அத்தனகல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததினால் தாழ்நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை கடற்படையினர் வள்ளங்கள் மூலம் மீட்டுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.

கடற்படையின் 23 வள்ளங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் இராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஆறுகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்கும் படி நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது விசேடமாக களனி கங்கையை அண்டி வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என திணைக்களம் கேட்டுள்ளது.

சீரற்ற காலநிலையின் காரணமாக , நாட்டின் 10 மாவட்டங்களில் 84 பிரதேச செயலக பிரிவுகளில் 60 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த ,இரண்டு இலட்சத்து 45ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் ,புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும்,கொழும்பு மாவட்டத்தில் ஒருவரும் ,கம்பாஹா மாவட்டத்தில் இருவரும்

,களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் ,காலி மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் 14 பேர்

உயிரிழந்திருப்பதுடன் இருவர் காயமடைந்திருப்பதுடன் இருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூவாயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 658 பேர் தற்காலிக பாதகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

14 வீடுகள் முழுமையாகவும் 817 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.


    Leave a Reply