வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – அழிக்கும் தமிழர் கண்ணீர்

Spread the love

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – அழிக்கும் தமிழர் கண்ணீர்

நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் பகுதியளவும் சில வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஆங்காங்கே சிறு அளவிலான மண்சரிவு

சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் தடைகளுக்கு மத்தியிலேயே

வாகன போக்குவரத்து இடம்பெறுகின்றது. கடும் பனிமூட்டம் நிலவுவதால்

அவதானமாக வாகனம் செலுத்துமாறு சாரதிகளை பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்..

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால்

வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

மஸ்கெலியா சாமிமலை, ஓல்டன் கீழ்பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளுக்கு

வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட ஆலயமும் நீரில் மூழ்கியுள்ளது.

சாமிமலை பாக்ரோ தோட்டப்பகுதியில் வெள்ளத்தால் 12 குடும்பங்களும்,

கொட்டகலை சார்மஸ் தோட்டத்தில் 23 குடும்பங்களும் தலவாக்கலை

ஸ்டார்லின் பகுதியில் 25 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குடும்பங்களைச்

சேர்ந்த உறுப்பினர்கள், உறவினர்களின் வீடுகளிலும், பாதுகாப்பான

இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேவையான உதவிகளை அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா,

தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்..

      Leave a Reply