வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழில் அமைச்சர்

Spread the love

வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழில் அமைச்சர்

கடந்த காலங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போன்று

எதிர்காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சவால்களில் வெற்றியடைய வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை புதிய ஆண்டில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

‘இந்த வருடத்தில் நாம் எல்லோரும் இணைந்து கடந்த வருடத்தைப் போலவே, எமது அமைச்சின் பொறுப்புக்களையும், கடமைகளையும் விரைந்து செயற்படுத்த வேண்டும்.

எம்மத்தியில் காணப்படுகின்ற சவால்களை வெற்றிகொள்வது மாத்திரமன்றி, எமது பயணத்தில் எதிர்கொள்ளுகின்ற சவால்களையும் இதன்மூலம் வெற்றிகொள்ள வேண்டும்.

எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சிறந்த இராஜாங்க அமைச்சரும், அமைச்சின் செயலாளரும், இராஜாங்க அமைச்சின் செயலாளரும், பணிப்பாளர் நாயகமும் ஏனைய அதிகாரிகளும் கிடைத்துள்ளனர்.

ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் வழிகாட்டலில், நிதி அமைச்சரின் பக்கத் துணையுடன் எமது பொறுப்புக்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இதுவரை காலமும் இந்த அமைச்சை முன்னெடுப்பதற்கு நீங்கள் அனைவரும் வழங்கி வரும் ஒத்துழைப்பினை நான் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.

தங்கு தடைகளற்ற உங்களது நலன் சார்ந்த சுதந்திரமான பணிகளுக்கு எனது ஒத்துழைப்புக்கள் தொடர்ந்து கிடைக்கும்’ என்றும் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

    Leave a Reply