வெற்றிகரமாக தரையிறங்கியது நாசா விண்கலம்

Spread the love

வெற்றிகரமாக தரையிறங்கியது நாசா விண்கலம்

குறுங்கோள் பென்னுவை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய விண்கலம் 4 ஆண்டு பயணத்திற்கு பிறகு குறுங்கோளில் தரையிறங்கியது.

4 ஆண்டு பயணத்திற்கு பிறகு பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசா விண்கலம்


பென்னு குறுங்கோளில் தரையிறங்கிய விண்கலம்
வாஷிங்டன்:

பூமியில் இருந்து 330 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுங்கோள்களான பென்னுவை ஆய்வு செய்வதற்காக

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரெக்ஸ்’ எனப்படும் செயற்கை கோளை அனுப்பியது. 2016ம் ஆண்டு

அனுப்பப்பட்ட இந்த செயற்கைக் கோள், 2018ம் ஆண்டு பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து சீராக பயணம் மேற்கொண்டது.

அதன்பின்னர் படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டு நேற்று பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக

தரையிறங்கியது. பென்னு குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை ஆய்வுக்காக பூமிக்கு எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஓசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக் கோளில் உள்ள இயந்திரக் கரங்கள் குறுங்கோளை துளையிட்டு பாறைத் துகள்களை எடுக்கத் தொடங்கியது. இதேபோல் தூசித் துகள்களையும் சேகரிக்கிறது.

Leave a Reply