விஷப்பாறை மீன்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

விஷப்பாறை மீன்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Spread the love

விஷப்பாறை மீன்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாறை மீன்களால் கடித்து பாதிப்புக்குள்ளான மக்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மைக்காலமாக பல செய்திகள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜானக ரூபன் கூறுகையில், இந்த விஷ மீன் இனம் Gonmaha-Stone Fish’ என்று அடையளாப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

விஷப்பாறை மீன்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அவர் மேலும் கூறுகையில், இந்தப் பாறைமீன்கள் மணல் அல்லது இடிபாடுகள் நிறைந்த பாறை அடுக்குகள், ஆழமற்ற தடாகங்கள் மற்றும் குறைந்த அலைகள் உள்ள சிறிய குளங்களில் காணப்படும்.

இவை மெதுவாக இயங்கும் மீன்கள் என்பதால் பெரும்பாலும் மறைக்கப்பட்டு மற்றும் சில நேரங்களில் பாசிகளால் மூடப்பட்டிருக்கும்.

இந்த மீன்கள் இனப்பெருக்க நோக்கத்திற்காக கரைக்கு வருகின்றன. இவற்றின் முதுகில் அதிகளவான எலும்புகள் இருப்பதுடன் அவை மிகவும் விஷத்தன்மை பொருந்தியவை என அவர் தெரிவித்தார்.

எனவேடிகடலில் குளிக்கும் போது அவதானமாக இருக்குமாறும், கடற்கரைப் பகுதிக்கு செல்லும்போது செருப்பு அணிந்து செல்லுமாறும் பொதுமக்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.