வழமையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் – மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவிப்பு

Spread the love

வழமையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் – மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவிப்பு

பைஷல் இஸ்மாயில் –

திருகோணமலை – கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு பகுதி மாத்திரமே கொவிட் 19 இற்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேத, அலோபதி சிகிச்சை முறைகளுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு அது வேறு பிரிவாக இயங்கி வருகின்றது.

வைத்தியசாலையில் வழமையாக இடம்பெற்று வந்த வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் கிசிச்சைகளில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை என்று கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று நோயாளிகளுக்கான சிகிச்சைகள் வேறு பிரிவாக பிரிக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் யாவும் வேறாக இயங்கி வருகின்றது. கடந்த

காலங்களில் வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த வழமையான வைத்திய சேவைகளுக்கும், கொவிட் 19 தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்கும் எவ்விதத் தொடர்புகளும் இல்லாதவாறே இயங்கி வருகின்றன.

குறிப்பாக, வழமையான வைத்திய சேவைகள் வேறாகவும், கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சைகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு அவைகள் வெவ்வேறு தனித்தனி பிரிவுகளாக இயங்கி

வருகின்றது. அதனால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை பெற்றுவந்தவர்கள், சிகிச்சை பெற இருப்பவர்கள் தங்களின் சிகிச்சைகளை அச்சம் கொள்ளாமல் வழமை போன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலைமையை கருத்திற் கொண்டு கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துப் பொதிகளை வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளும்

செய்யப்பட்டுள்ளது. அதற்காக 0773205168 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தங்களின் கிளினிக் பற்றிய விபரங்களை தெரியப்படுத்தி மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply