வறுமையில் வாடும் மக்களுக்கு – மலிவு விலையில் உணவு

Spread the love

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும்

தேசிய திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் சகல உரிமை பெறுனருனருக்கும் விசேட சிறப்பு மின்னணு அட்டை ஒன்று வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சமூர்த்தி பெறுனர்கள் அதேபோல் சமூர்தி பெறாதவர்கள், நிலையான தொழிலற்றவர்கள், தோட்டதுறையில் தொழில் புரியும் தொழிலாளர்கள், தொழில் இல்லாத

அங்கவீனமுற்றவர்கள், விதவைகள், நிலையான வருமானமற்ற முதியோர் மற்றும் கடும் நோய்களுக்கு

வறுமையில் வாடும் மக்களுக்கு – மலிவு விலையில் உணவு

உள்ளானவர்கள் உள்ள குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்டவர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

சீனி, தேயிலைத் தூள், அரசி, தோதுமை மா, பருப்பு, கடலை, வெங்காயம், மிளகாய்தூள், கருவாடு, கிழங்கு மற்றும்

பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளன.

லங்கா சதோச, கூட்டுறவு விற்பனை வலையமைப்பு மற்றும் கிராம புறங்களில் தெரிவுச்செய்யப்பட்ட விற்பனை

நிலையங்கள் ஆகிய இடங்களில் ஆரம்பத்தில் குறித்த பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் வீடுகள், கிராமப்புறங்கள் மற்றும்

பெருந்தோட்ட தோட்டப் பகுதிகளில் இவ்வாறான கடைகளை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை

அளிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதனூடாக சிறு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு

உற்பத்திகள் மற்றும் உணவு மற்றும் பிற பொருட்களை நேரடியாக சந்தைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.வறுமையில் வாடும் மக்களுக்கு

Leave a Reply