வறுமையில் வாடிய 65 குடும்பங்களுக்கு , டென்மார்க் மக்கள் காப்பகம்- பேருதவி -20 photo

Spread the love

வறுமையில் வாடிய 65 குடும்பங்களுக்கு , டென்மார்க் மக்கள் காப்பகம்- பேருதவி -20 photo

இலங்கையில் கொரனோ அச்சறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டது

,இவ்வேளை தமது தொழில் வாய்ப்பை இழந்து வறுமையில் சிக்கி தவித்த மக்களுக்கு
டென்மார்க் மக்கள் காப்பகம், சிறந்த உதவிகளை வழங்கியுள்ளது

டென்மார்க்கில் உள்ள ஈழ தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வழங்கிய நிதி உதவி ஊடாக இந்த மக்களின் வயிற்று பசி போக்க பட்டு அந்த மக்கள் வாழ்வில் ஒளியேற்ற பட்டுள்ளது

டென்மார்க் ஊடாக சுதன்(Middelfart தொலைபேசி- 004560479043),
தேசிகன் ( Haderslev தொலைபேசி – 00 4527574583 ) ஆகியோரின் ஒழுங்கமைவு ஏற்பாட்டினூடாக


வறுமை கோட்டின் கீழ் வாழும் கொரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

ஒரு குடும்பத்திற்கு தலா 2000 ருபாய் பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் 65 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இதனை திறம்பட ஏற்பாடு செய்து உரியமுறையில்
பாதிக்க பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு பொதிகளை

விநியோகம் செய்த ,பரந்தன் இளைஞர் வட்டத்தினருக்கும் ,இதன் கழக உறுப்பினர்களுக்கும் எமது மன மார்ந்த நன்றிகளை டென்மார்க் மக்கள் காப்பகம் தெரிவித்து கொள்கிறது .

மேலும் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் டென்மார்க் வாழ் மக்கள் வசித்து வருகின்ற பொழுதும் ,அவை கடந்து ஒருமித்து

இன்முகத்துடன் பேருதவி புரிந்த டென்மார்க் வாழ் தமிழ் மக்களுக்கு எதிரி இணையம் பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும் ,தலை சாய்த்து இவ்வேளை தெரிவித்து கொள்கிறது

தொடரட்டும் உங்கள் பணி ,வெல்லட்டும் நம் தமிழ் …. .!
செய்தி வழங்குனர் – தேசிகன்

      Leave a Reply