வருடாந்தம் 500 பில்லியன் ரூபாய் நஷ்டம்

வருடாந்தம் 500 பில்லியன் ரூபாய் நஷ்டம்
Spread the love

வருடாந்தம் 500 பில்லியன் ரூபாய் நஷ்டம்

புகையிரத போக்குவரத்து உட்பட இலங்கையின் போக்குவரத்துத் துறை இன்னும் அபிவிருத்தி செய்யப்படாமல் இருப்பதனால் அரசாங்கம் ஒவ்வொரு

ஆண்டும் சுமார் 500 பில்லியன் ரூபாய் வருமாத்தை இழக்கிறது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டிகள், பொதுமக்கள் மற்றும் அரச போக்குவரத்துத்துறையைக் கருத்தில் கொண்டு தன்னால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் மூலமே இந்த இழப்புத் தொடர்பான தகவல் தெரிய வந்துள்ளதாக அவர் எமது சகோதர ஊடகமான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

இதன்படி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறைந்தபட்சம் 40 முச்சக்கர வண்டிகள் ஒரு திசையில் பயணிப்பதாகவும், அதேளை அப்பகுதியில் பொதுப் போக்குவரத்துப் பேருந்து பல கிராமப் பகுதிகள் உட்பட பிரதான

போக்குவரத்து பாதைகளில் மணித்தியாலத்திற்கு ஒருமுறை மாத்திரமே பயணிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக விஜேரத்ன தெரிவித்தார்.

இது நாட்டின் போக்குவரத்துத்துறையின் மதந்தமான மோசமான நிலையைக் காட்டுகிறது.

வருடாந்தம் 500 பில்லியன் ரூபாய் நஷ்டம்

இவ்வாறான மந்தமான போக்குவரத்து முறையினால் தான் முச்சக்கரவண்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஒரு மில்லியன் முச்சக்கரவண்டிகளும் 13,500 பேருந்துகளும் இயங்குகின்றன.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிற போக்குவரத்து சாதனங்கள் முக்கிய காரணிகளாக குறித்த ஆய்வில் உள்வாங்கப்படவில்லையென அவர் தெரிவித்தார்.

எனவே, உள்நாட்டு போக்குவரத்து முறைமையை உடனடியாக அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.