லண்டன் லூசியம் பகுதியில் கத்தி வெட்டு தாக்குதல்

Spread the love

லண்டன் செய்திகள்

லண்டன் லூசியம் St Nortberts Road in Brocklyபகுதியில் கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று கடந்த திங்கட் கிழமை இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியில் உள்ள கோப் சூப்பர் மார்க்கட் அருகில் பதினெட்டு வயது வாலிபன் மீதே கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த கத்தி வெட்டு தாக்குதல் சம்பவத்தில் பலத்த காயமடைந்த வாலிபர் சவுத் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

இந்த சம்பவத்தில் காயமடைந்த வாலிபர் தற்போது உயிராபத்து இன்றி தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கத்தி வெட்டு சம்பவம் தொடர்பில் போலீசார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த கத்தி வெட்டு சம்பவத்தை கண்ணுற்ற மக்கள் யாரவது இருந்தால் தமக்கு மேலதிக தகவலை தந்துதவு மாறு காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

லூசியம் பகுதியில் இவ்வாறான கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் அதிகரித்து செல்லும் நிலையில் இரகசிய கமராக்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பு என்பன பல படுத்த பட்டுள்ளன.

அவ்விதமனா சூழலிலும் இந்த கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் அதிகரித்து செல்கின்றமை பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லூசியம் பகுதியில் கத்தி வெட்டு தாக்குதல் அதிகரித்து செல்வதால் இதனை தடுக்க வேண்டிய நெருக்கடியில் மாநகரசபை மாற்று காவல்துறையினர் தள்ள பட்டுள்ளனர் .

தொடர்ந்து லூசியம் பகுதியில் கத்தி வெட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்லுமெனின் காவல் துறையினர் கவுன்சில் ஆதரவுடன் சில சட்ட இறுக்கத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்படப்போகிறது .

லண்டன் லூசியம் பகுதியில் கத்தி வெட்டு தாக்குதல்
லண்டன் லூசியம் பகுதியில் கத்தி வெட்டு தாக்குதல்

சந்தேகத்திடமான நபர்களை கண்ட இடத்தில சோதனை புரிந்து அவர்களை கைது செய்யும் விசேட பிடிவிறாந்து
சட்டம் அமுலுக்கு கொண்டு வரும் நிலை ஏற்படும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

லண்டன் லூசியம் பகுதியில் குற்றங்களை தடுக்கவும் மக்களை பாதுகாக்கவும் காவல்துறையினருக்கு அதிகாரங்களை அதிகாரி பட்டால் மட்டுமே இவ்வாறான கத்தி வெட்டு தாக்குதல் சம்பவங்களை தடுக்க முடியும் என்பது பிடிவாதமாக உள்ளது

இலங்கையை போல் லண்டன் லூசியம் பகுதியிலும் சோதனைகள் இறுக்கமடையும் நிலையை இவ்வாறன சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன .

  • வன்னி மைந்தன்

    Leave a Reply