லங்கா சதொசவில் ,அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

Spread the love

லங்கா சதொசவில் ,அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொசவில் அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

நேற்று முதல் இந்த பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதற்கமைவாக விலை குறைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு.
இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா ஒரு கிலோ 194 ரூபா.
ஒரு கிலோ பருப்பு 460 ரூபா.
ஒரு கிலோ சிவப்பு சீனி 310 ரூபா.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசி 198 ரூபா.
ஒரு கிலோ நெத்தலி 1,375 ரூபா

இவ்வருடம் ஜூன் மாதம் முதல் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த லங்கா சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன, மக்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்குவதற்கு

சதொச நிறுவனம் செயற்படும் எனவும், பொருட்களின்
விநியோகத்தை கருத்திற்கொண்டு ஏனைய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    Leave a Reply