ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில்

ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில்
Spread the love

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சியில்

ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கியுள்ளார் என ரணில் விக்கிரமசிங்கா ஊடக பிரிவு தெரிவித்துள்ளது .

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி பயணம்

தமிழர் வடபகுதியாக விளங்கும் கிளிநொச்சி இரணை மடுவிற்கு பயணம் செய்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தமிழ் மக்கள் 1700 பேருக்கு காணி உறுதிகளை வழங்கி வைத்தார் .

டக்கிளஸ் தேவானந்தா தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, காணி உறுதிகளை மக்களுக்கு கிளிநொச்சி இரணைமடுவில் வழங்கி வைத்துள்ளார் .

வனஜீவராசி திணைக்களம்

வனஜீவராசி திணைக்களம் உறுதிகளை ,இதே ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சியில் பறித்து வரும் நிலையில் ,கிளிநொச்சி இரணைமடுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் இவ்விதம் உறுதி பத்திரங்கள் வழங்கி வைக்க பட்டுள்ளது .

இலங்கை ஆளும் ஜனாதிபதிகள் சிங்கள பவுத்த மேலான்மை பாசிச கொள்கைகள் இன்றுவரை மாறவில்லை என்பதை ,காணி அபகரிப்பு நடத்தும் வனஜீவராசிகள் திணைக்கள நடவடிக்கைகள் எடுத்து காட்டுகின்றன .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றியை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுவிட வேண்டும் என்பதில், தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அதி தீவிர நகர்வில் ஈடுபட்டு வருவதை ,இந்த பயண விடயங்கள் மக்கள் சந்திப்புக்கள் எடுத்து காட்டுகின்றன .