மனைவி வயிற்றை வெட்டிய கணவன்

மனைவி வயிற்றை வெட்டிய கணவன்
Spread the love

கர்ப்பிணி மனைவி வயிற்றை வெட்டிய கணவன்

மனைவி வயிற்றை வெட்டிய கணவன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ளது என்ன பிள்ளை, என்பதை பார்க்க இவ்வாறு அவர் வெட்டியுள்ளது தெரிய வந்துள்ளது .

இந்திய உத்தரபிரதேச பகுதியில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை ,ஆணா பெண்ணா என அறிய ,ஆசை பட்ட கணவன் மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் .

ஆண் குழந்தை வெட்டி கொலை

இவருக்கு முன்னதாக ஐந்து பெண் பிள்ளைகள் தொடராக பிறந்த நிலையில் ,ஆண் குழந்தை இல்லை என வீரக்தி உற்ற கணவன் ,ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டு இப்பொழுது மனைவியை கர்ப்பம் ஆக்கியுள்ளார் .

அதனை அடுத்தே எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றை வெட்டிய கணவன்,குழந்தையை பார்க்க முனைந்துள்ளார் .

அரிவாளை எடுத்து மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் ,கணவன் அரிவாள் வெட்டில் வயிற்றில் உள்ள சிசு ,இறந்துள்ளது

மனைவி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .

ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,பொலிஸாரினால் ,கணவன் கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

பிள்ளை வரம் என்பது கடவுள் கொடுக்கும் வரமாகும் ,அதனை யாரும் தட்டி கழிக்க முடியாது .

பெண் பிள்ளைகள் பெற்ற பல குடும்பங்கள் அதே பெண் பிள்ளைகளினால் , அந்த குடும்பம் கொண்டாட படும் நிலைக்கு உள்ளான சம்பவங்களும் ,இந்த உலகில் பதிவாகியுள்ளது .

அவ்வாறான நிலையில் இந்த கணவன் புரிந்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இப்படியும் முரட்டு கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இவை ஒரு உதாரணமாக உள்ளது .