யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களுக்கு பதவி

Spread the love

யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களுக்கு பதவி

யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களுக்கு 17 ஜூலை 2021 முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் 58 வது பதவி நிலை பிரதானியாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனமானது பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரையில் அதிமேதகு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மேற்படி நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்பாக 19 ஜனவரி 2021 முதல் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 25 வது தளபதியாகவும் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, ,59 வது

படைப்பிரிவின் தளபதி , 51 வது படைப்பிரிவின் மேற்பார்வை தளபதி, 513 வது பிரிகேட் தளபதி, 144 வது பிரிகேட் தளபதி உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளதோடு, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில்

அமைந்துள்ள இராணுவ தலைமையக வளாகம், மற்றும் பல பாதுகாப்பு படை அலுவலகங்களின் சுகாதார அலுவல்களுக்கு பொறுப்பான அதிகாரியாகவும், இலங்கை மகளிர் படையணியின் தளபதியாகவும் அவர் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா (ஆர்.டபிள்யு.பி ஆர்.எஸ்.பி என்.டி.யூ) இறுதி யுத்த காலத்தில் வன்னியில் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கான போரில் பெரும் பங்களிப்பு செயத் ஒருவரும் ஆவார். அவருடைய கட்டளையின் கீழான 593 வது பிரிகேட் மற்றும் 631 பிரிகேட் படைகளால்

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் வசமிருந்த மாங்குளம் நகரம், ஒழுமடு, அம்பகாமம் ஆகிய பகுதிளுடன் உடயர் கட்டுக் குளம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த நீர்மூல்கி கப்பல்களை கட்டமைப்பதற்கான

கட்டிடமும் கைபற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2009 ஆம் ஆண்டு இறுதிகட்ட சமாதான நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட பின்னர் 533 வது பிரிகேட் தளபதியாக நியமனம் பெற்றார்.

அவரது சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையில், பல்வேறுப்பட்ட திறன்களுடன் வெவ்வேறான நியமனங்களை பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் உக்கிரமான போர் நடவடிக்கைகளின் போது களத்தில் செயப்பட்ட வீரமிக்க காலாட் படை வீரராகவும் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. 5 வது

கெமுனு ஹேவா காலாட் படையணியின் பிலட்டூன் தளபதியாக அவர் வடமராச்சி நடவடிக்கைகளின் பங்கேற்றார்., பின்னர் திருகோணமலை பகுதியில் பணியாற்றினார்.

தாய்நாட்டை இரக்கமற்ற பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக “பலவேகய” மற்றும் “அகுணு பிராஹார” ஆகிய முக்கிய போர் நடவடிக்கைகளிலும் பங்கெடுத்துளார்.

அத்தோடு 7 வது கெமுனு ஹேவா காலாட் படைகளின் கம்பணி தளபதியாக மன்னார் – சிலவத்துறையிலுள்ள கடற் புலி தளத்தை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட முதலாவது நடமாடும் போர்க்கள நடவடிக்கைகளின் போதான அனுபவம் கொண்டவர். அத்தோடு யாழ். நகரத்தை

மீட்பதற்கான ரிவிரெச நடவடிக்கையிலும் பங்களிப்பு செய்தவர் ஆவார். 2000 ஆம் ஆண்டில் 9 வது கெமுனு ஹேவா காலாட் படையின் 2 ஆம் நிலை கட்டளை அதிகாரியாகவும் நியமனம் பெற்ற

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஆணையிறவில் எதிர்கொண்டு பின்னர் நடத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கும் அர்ப்பணிப்புடன் பங்களித்தார்.

கொமாண்டோ படைப்பிரிவின் கீழான 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியாகவும் 2007 ஆம் ஆண்டில் தொபப்பிகலவை விடுவிக்கும் நடவடிக்கைகளிலும் அவர்

ஒரு முக்கிய பங்கு வகித்தார். அத்தோடு, அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பட்டாலியன் மூலம் 593 பிரிகேடுக்கு பல எல்.டி.டி.ஈ வசமிருந்த முல்லைத்தீவு பகுதிகளை கைப்பற்றுவதற்கு படையினருக்கு காணப்பட்ட நெருக்கட்டிகளை கலைந்தவராகவும் அவர் திகழ்ந்தார்.

கனிஷ்ட காலாட்படை பயிற்சி கல்லூரியின் – மஹொவ் இந்தியா, எதிர்த்து போரிடும் உத்திகள் மற்றும் வனப் பகுதிக்குள் போரிடுதல் தொடர்பிலான கற்கைநெறி, வெரிகேட் இந்தியா

கல்லூரியில் சிரேஸ்ட போர் கட்டளை பயிற்சி கல்லூரியிலும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான பாதுகாப்பு கட்டமைப்பை விஸ்தரிப்பது தொடர்பிலான கற்கை நெறியை

அமெரிக்காவிலும் மூலோபாயங்கள் தொடர்பான பாடநெறியை சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.

அதேபோல், சீனாவில் முதுநிலை இராணுவ அறிவியல் மூலோபாயம் மற்றும் முகாமைத்துவ கற்கை நெறியையும் , கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவ கற்கை நெறியில் முதுகலை பட்டத்தையும், பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தி

ல் தந்திரோயங்கள் தொடர்பான டிப்ளோமாவையும், சர்வதேச துறைமுகங்கள் மற்றும் கடல்சார் குறியீடுகள் தொடர்பிலான சான்றிதழுக்கான பயிற்சி நெறியை இலங்கை கடற்படையிலும்,

வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்படுகின்ற பயங்கர வாதத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை விஸ்தரிப்பது தொடர்பிலான பயிற்சி நெறி,

ஆகிய பசுபிக் நிலையத்தில் பாதுகாப்பு கற்கை நெறியை அமெரிக்காவிலும், இந்தியா மற்றும் மனித வள முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் அவர் தொடர்ந்துள்ளார்.

கொழும்பு 05 இன் இசிபதன கல்லூரியின் பெருமைமிக்க மாணவர்களில் ஒருவரான அவர், 1986 ஜூன் 2 ஆம் திகதி நிரந்த படையணியின் கெடட் (பயிலுனர்)-24 அதிகாரியாக இராணுவத்தில் இணைந்துகொண்டார். இவர் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அடிப்படை

பயிற்சி நெறிகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர் அவர் பாகிஸ்தான் மங்லாவிலுள்ள அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், கனிஷ்ட அதிகாரிகளுக்கான ஆயுத பயிற்சி பாடநெறியை பாகிஸ்தான் குவேட்டாவிலுள்ள காலாட் படை மற்றும் போய்

உபாயங்கள் தொடர்பான பயிற்சி கல்லூரியில் பெற்றுக்கொண்ட அவர், 18 மே 1987 அன்று 4 வது கெமுனு ஹேவா படையனியின் 2 ஆம் நிலை லெப்டினனாக நியமனம் பெற்றார். அவர் விரைவில் தனது புதிய அலுவல கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

    Leave a Reply