யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்; முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு

Spread the love

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்; முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்குள் உள்ள நினைவுத் தூபி இன்று (08) இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

நினைவுத் தூபிகள் இடித்து அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மாணவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்கலை முன்றலில் கூடியுள்ளனர்.

யாழ்பல்கலைகழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

முகங்களை முழுமையாக மூடியபடி இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னிணைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்பு பகுதியே இந்த இடித்து அழிக்கும் பணியை இரவோடு இரவாக முன்னெடுத்தது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக

மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நினைவு தூபி இடித்தடிக்கப்பட்டது.

இதேவேளை நள்ளிரவை தாண்டியும் பல்கலை மாணவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பல்கலை முன்றலில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்நிலையில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் , பொலிஸார் , இராணுவத்தினர் குவிக்கப்ட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு

Leave a Reply