யாழில் 143 பேருக்கு கொரனோ-பரப்பிய இராணுவம்

Spread the love

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானோரில், திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள், தொழிலாளர்கள் 127 பேர் அடங்குகின்றனர் என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 746 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே 143 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், மருத்துவ பீட மாணவர்கள் மூவர், தாதிய மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட ஏழு பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகரில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டிருத்த நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    Leave a Reply