மூடப்பட்டிருந்து சில பகுதிகள் மீள திறப்பு

Spread the love

மூடப்பட்டிருந்து சில பகுதிகள் மீள திறப்பு

கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்து நாவலப்பிட்டி நகரம் இன்று திறக்கப்பட்டது.

கடைகள் மற்றும் பொது இடங்கள் முழுமையாக கிருமி ஒழிப்புக்கு பின்னர் இன்று நகரம் திறக்கப்பட்டது

நகரத்திற்குள் நுழையும் மக்களுக்கு நகரம் முழுவதும் ஒலிபெருக்கிகள் மூலம் பொது மக்களுக்கு போலிசார் கொரோனா குறித்து தெளிவுபடுத்தினர்.

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு கடற்படை வீரர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாவலபிட்டிய நகரம் சமீபத்தில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

    இதேவேளை கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட கண்டி

    மாவட்டத்தின் அக்குரணை பகுதியும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியும் நேற்று மீள திறக்கப்பட்டன.

    குறித்த பகுதிகளில் இறுதி நோயாளி அடையாளம் காணப்பட்ட நாள் முதல் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை

    மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ,இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் குறித்த பகுதிகளை மீண்டும் திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். .


    இதேவேளை கொரோனா தொற்று காரணமாகவும் ஒருவர் உயிரிழந்திருந்தமையாலும் மூடப்பட்டிருந்த மருதானை ,மாமுல் அருஸ் மாவத்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

    .மாமுல் அரூஸ் மாவத்தை தொடர்மாடிக் குடியிருப்பைச் சேர்ந்த 302 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு புனானை கண்காணிப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து கடந்த 17 ஆம் திகதி அவர்களின் தனிமைப்படுத்தல் காலப்பகுதியை நிறைவு செய்த பின்னர்

    வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.ன்று முதல் 14 நாட்களுக்கு அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டனர்.

    சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு 14 நாட்கள் நிறைவுற்ற நிலையில், குறித்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது

    நாவலப்பிட்டி
    நாவலப்பிட்டி

        Leave a Reply