முப்படை, பொலிஸார் சுகாதார அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

Spread the love

முப்படையினர், பொலிஸார் சுகாதார அதிகாரிகளின் அர்ப்பணிப்பை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பாராட்டியுள்ளார்.

யாழ் குடா நாட்டில் கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுவருகின்ற நூற்றுக்கணக்கான முப்படையினர், விஷேட

பொலிஸ் அதிரடிப் படையினர், மற்றும் பொலிஸ் ஆகியோரை பாராட்டும் முகமாகவும் அவர்களுக்கு இனிய புத்தாண்டு

நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் முகமாகவும், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள்,

யாழ்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டதோடு, தங்கள் சொந்த உயிருக்கான

ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல், பாராட்டத்தக்க மனிதாபிமான சேவைகளைச் செய்யும் படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றினார்.

கூட்டத்தின் மத்தியில் அவர் உரையாற்றுகையில், அவர் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்த்தோடு, அதிமேதகு

ஜனாதிபதியின் பாரம்பரிய இனிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் தடுப்பு

நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப்பட்டுள்ள சவால்களை பற்றியும் விவரித்தார்.

“யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய ஆபத்தான மாவட்டங்களில் உங்களால் மேற்கொண்ட

அர்ப்பணிப்பானது, சுகாதார அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து. பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு பல்வேறு நிலைகளில் பல தொடர்புகள் இருந்தன, மேலும் அவர்கள் தங்கள் அறிவுக்கெட்டிய

வகையில் இல்லாமல் வைரஸை பரப்பியிருக்கலாம். அதேபோல், அந்த நபர்களில் பலர் தாங்கள் சென்ற இடங்கள் மற்றும் பற்றிய தகவல்களை மறைக்க முயற்சி செய்துகொண்டிருந்தமையினால்

, எங்கள் படைகளும் பொலிஸாரும் பலவழிகளில் செயல்பட வேண்டியிருந்தது. ஏனெனில். எங்கள் அர்ப்பணிப்புள்ள படையினரும் பொலிஸாரும் அவர்களின் 2 ஆவது, 3 ஆவது,மற்றும் 4

ஆவது கட்ட தொடர்புகளை சரியாக உறுதிப்படுத்த இரவும் பகலும் உழைக்க வேண்டியிருந்தது. அவர்களின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய அனைத்து தொடர்பு

முறைகளையும் கண்காணித்து அல்லது கண்டறிய வேண்டியிருந்ன. உங்களால் கண்டறியப்பட்ட அனைத்து தொடர்புடைய தகவல்களும் ,எங்கள் புலனாய்வுத்துறை மற்றும்

பொலிஸார் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டனர், ”என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் அத்தியாவசிய சேவைகளைப் பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட அனைத்து சிவில் அதிகாரிகளுக்கும் அவர்களின் சிறந்த பணிகளையும்

உதவிகளையும் தொடருமாறு கேட்டுக்கொண்ட அவர், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், பாரா மருத்துவ ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள்

மற்றும் யாழ் மக்களின் நலன் கருதி கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு எதிராக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட

கடற்படை, விமானப்படை, விஷேடபொலிஸ் அதிரடிப் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பொலிஸ்

அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் உட்பட பலர் பாதுகாப்பு செயலாளரின் உரையில் கலந்து கொண்டனர்.

முப்படை பொலிஸார் சுகாதார
முப்படை பொலிஸார் சுகாதார

Leave a Reply