மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு நாள்!

Spread the love

மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு நாள்!


வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி

வெற்றிகொண்ட 219 ஆவது ஆண்டு நாள் இன்று.

1803 இல் ஒக்டோபர் 31 கப்டன் “ஹென்றிபேக்” கற்சிலைமடுவில் பண்டாவன்னியன்

தோற்கடிக்கப்பட்டதாக சொல்லும் நடுகல்லும் தற்போதைய இலங்கைப் படையினரால்

உடைக்கப்பட்ட நிலையில் இன்றும் ஒட்டிசுட்டானில் காணப்படுகிறது.

1803 ல் தோற்கடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பண்டாரவன்னியன் அதற்குப் பிறகும்

சிலபோர்களை நடத்தி 1811ல் வீரமரணமடைந்தான் என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் இன்றும் உலாவுகின்றன.

    Leave a Reply