கோயிலுக்குள் உடுப்பு காய போட்ட ஐயர் – கொதிக்கும் மக்கள்

Spread the love

கோயிலுக்குள் உடுப்பு காய போட்ட ஐயர் – கொதிக்கும் மக்கள்

இந்த இறம்பொடை சின்மயா மிஷன் வளாகத்தில் ஸ்ரீ பக்த அனுமந்த கோவிலும் பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரின்

வணக்கஸ்தலமும் இருக்கின்றது இந்த வணக்கஸ்லதத்திலேயே உடைகள் கழுவி காய போடப்பட்டுள்ளன. இது மூடி வைக்கும்

ஓதுக்கப்பட்ட மண்டபம் கிடையாது பூஜைக்குறிய இடமாகும். உடைகள் கழுவி காய போடும் இடமல்ல. ஸ்ரீ பக்த அனுமந்த

ஆலயத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் தற்போதைக்கு இல்லை என்பது குறிப்பிடதக்கது.

பணம் படைத்தவர்களின் சர்வாதிகார செயற்பாடுகள் மூலம் இலங்கையில் முன்னெடுக்கபட்டு வரும் சின்மயா மிஷன் ஆன்மீகம்

என்ற போர்வையில் மலையகத்தில் சீரழிவான செயற்பாடுகளில் செயற்பட்டு வருகின்றது.

பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரால் ஆன்மீக நிறுவனமான சின்மயா மிஷன் உயர்ந்த ஆன்மீக நோக்கங்களுடன் உலகம்

முழுவதும் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் வேதாந்தத்தின் ஊடாக மக்களிடம் அமைதியையும் சந்தோஷத்தையும் சேவையின் ஊடாக பரப்புதலை கொள்கையாக கொண்ட நிறுவனமாகும்

இருந்தும் இலங்கை மத்திய மலைநாட்டில் இறம்பொடையில் அமைந்துள்ள இந்த சின்மயா மிஷன் நிர்வாக தலைவர் உட்பட

உறுப்பினர்கள் கொள்கைகளை மறந்து புறம்பான வியாபார நோக்கில் செய்பட்டு வருகின்றனர்.ஆரம்பத்தில் சின்மயா மிஷன்

மலையக மக்களின் நிலை கண்டு சேவை செய்யவே வந்தது. தற்போது முற்றிலும் வேறுபட்ட விதத்தில் செயற்படுகின்றது.

மலையக மக்களுக்காக பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரால் உறுவாக்கபட்ட இந்த ஆச்சிரமம் மலையக

பெருந்தோட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய சமய கலாசார விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் ஆகும். இந்த விடயம் இங்கு நடைபெறுவதில்லை.

இந்த மிஷனில் சேவை செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் மலையகத்தை சேர்ந்த இரண்டு பிரமசாரிகளும் ஒரு

பிரம்மசாரினியும் இந்தியா சென்று கற்று பயிற்சி பெற்று இலங்கை வந்துள்ளனர். இவர்களையும் இங்கு சேவை செய்ய விடுவதில்லை.

ஒருவர் கண்டியிலும் ஒருவர் ஹட்டனிலும் வீட்டில் இருக்கின்றனர். நிர்வாகம் முழுவதும் ஒரு கம்பனி நிர்வாகம் போல் வியாபாரத்தை

நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இந்த பயிற்றப்பட்ட பிரமசாரிகள் மலையக மக்களுக்கு சேவை செய்ய எத்தனித்த போதும் அதற்கான எந்தவிதமான ஒத்துழைப்பும் மிஷனில் இல்லை.

தற்போது உள்ள நிர்வாகம் தமிழ் மக்களிடையே ஒரு பிரதேசவாத்துடனயே அன்மை காலமாக செயற்பட்டு வருகின்றது.

மிஷனிலும் மிஷன் வளாகத்தில் காணப்படும் ஸ்ரீ பக்த அனுமந்த ஆலயத்திலும் வேலை செய்வதற்கு மாத்திரமே மலையகத்தில் இருந்து எடுத்துள்ளனர்.

மலையகத்தின் பிரமசாரியானவர்களையும் மிஷனின் மலையக ஆயுட்கால உறுப்பினர்களையும் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இவர்களை எந்தவிதமான நிர்வாக செயற்பாடுகளுக்கோ சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கோ இணைத்துக் கொள்வதில்லை.

இது பிரதேசவாதம் என்பதை பறைசாட்டுகின்றது. இந்த விடயம் குறித்து உலக சின்மயா மிஷன் தலைவர் இலங்கை வந்திருந்த போது முறையிடப்பட்டாலும் இது வரை எந்த முடிவும் இல்லை.

குறிப்பாக இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீ பக்த அனுமந்த ஆலயம் அமைப்பதற்கு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின்

பங்கும் மலைய பெருந்தோட்ட மக்களின் பங்கும் அதிகமாகவே இருந்துள்ளது. இது குறித்து சின்மயா மிஷன் நிர்வாகத்திற்கு தெரியாது போலாகும். இது மலையத்தின் சொத்து.

இவ்வாறான நிலையில் இறம்பொடையில் அமைந்துள்ள இந்த சின்மயா மிஷனில்; தற்போது வியாபாரமே நடந்து வருகின்றது.

ஹோட்டல் இருக்கின்றது அறைகள் இருக்கின்றது. வருகின்றனவர்கள் நன்கு உண்டுவிட்டு தங்கிவிட்டு செல்லலாம்.

அதுமட்டுமல்ல இங்கு பல சமூக சீர்கேடுகளும் பிரதேசவாத செயற்பாடுகளும் இந்த வளாகத்தில் நாளாந்தம் செயற்பட்டு

வருகின்றது. இது ஒரு சமய அமைப்பு என்பதால் எதனையும் கூற முடியாது. இருந்தும் எல்லையை மீறியதினால் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளோம். மன்னிக்கவும்

இங்கு பஜன் செய்வதற்கு என அமைக்கபட்ட பிரதான மண்டபத்தில் தற்போது ஊழியர்கள் உடுப்பு காயப்போடும் இடமாக மாறியுள்ளது. இந்த இடத்திற்கு செல்பவர்கள் மிகவும் பயபக்தியுடனே செல்லுவர்.

இந்த இடத்திலேயே பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தர் குருஜியின் அவர்களின் படங்கள் இருகின்றன. இவருக்கே மறியாதை இல்லை என்றால் மலையக மக்களுக்கு எங்கே இருக்க

போகின்றது. இந்த விடயம் தொடர்பில் நிர்வாகத்துடன் வினாவுவதற்கு முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை. அவர்கள் தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந் நிலையில் இந்த விடயம் குறித்தும் மலையகத்தில் ஆன்மீகம் என்ற போர்வையில் சீரழிக்கபட்டு வரும் செயற்பாட்டு குறித்தும்

ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர மலையகத்தின் சமூக அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இந்த விடயம் குறித்த

இந்தியாவில் அமைந்துள்ள சின்மயா மிஷனின் தலைமைய அலுவலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

      Leave a Reply