மலையக தோட்டங்களில் மது உற்பத்தி – கண்டு கொள்ளாத காவல்துறை photo

Spread the love

மலையக தோட்டங்களில் மது உற்பத்தி – கண்டு கொள்ளாத காவல்துறை photo

மலையகத்தில் மது விற்பனை மது உற்பத்தி கொரோனோ நோய் பரவலின் பின்னர் அதிகரித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக மதுபானசலைகள் மூடியிருந்த வேலையில் சுயமான

மது உற்பத்திகள் தோட்டங்கள் தோரும் முன்னெடுக்கபட்டன. இதன் பிரதிபளிப்பாக தொடர்ந்தும் சட்டவிரோத மதுபான தயாரிப்புகள் தோட்டங்கள் தோரும் முன்னெடுக்கபட்டு வருகின்றன. இதனால்

சமூக பின்னடைவும் சமூக நோய்களும் மலையகத்தில் உறுவாக வாய்ப்புகள் உள்ளது.  இதனை கண்டறிந்து தடை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்த மது உற்பத்திகளுக்கு தோட்டங்கள் தோரும் ஒவ்வொறு பெயர்களும் உள்ளன முன்னர் போன்று கசிப்பு கள் சாராயம் என்று கூறுவதில்லை புனைப் பெயர்களே அதிகம். அந்த வகையில்

அன்மை காலம் முதல் டொப்பு என்ற பெயரில் தயாரிக்கபட்ட சட்ட விரோத மது உற்பத்தியே இது. இந்த உற்பத்திகள் பொலித்தீன் பைகளில் நிரப்பபட்டு வினியோகிக்கப்படுகின்றது. இதற்கான

மூலப்பொருட்களாக பழங்கள் குறிப்பாக அன்னாசி பழம் பப்பாசி பழம் சீனி ஈஸ்ட் உட்பட பல வெறியும் சுவையும் வர கூடிய

பொருட்கள் போடபட்டு மிக நீண்ட நேரம் பதப்படுத்தபட்டு வினியோகிக்கப்படுகின்றன. இது  உடம்புக்கு கேடு விளைவிக்க கூடியது. இதனுடன் மேலும் கிதுள் கள்ளும் உற்பத்தி

செய்யப்படுகின்றது. இதற்கு மூலப்பொருட்களாக கிதுள் பானி சீனி ஈஸ்ட் உட்பட பல வெறியும் சுவையும் வர கூடிய பொருட்கள்

போடபட்டு மிக நீண்ட நேரம் பதப்படுத்தபட்டு உற்பத்தி செய்யப்படுகின்றது.  

பொதுவாக தோட்டங்களில் மது உற்பத்திக்கு மதுவரி அதிகாரிகளினதும் பொலிஸாரின்; ஒத்துழைப்பும் அவர்களின் முறையற்ற செயற்பாடுகளும் காரணமாக இருக்கின்றது.

இந்நிலையில் மக்களை குறை கூறுவதில் நியாயம் இல்லை.   இவர்கள் தோட்ட புரங்களில் காணப்படும் சட்டவிரோத மினி பார்கள் அழிக்க நடவடிக்கை எடுக்காமையும்¸ காவல் துறையினர்

 ஒத்துழைப்பு வழங்குகின்றமையும்¸ சட்டவிரோத மது உற்பத்தியாளர்களுக்கு சட்டத்தின் மூலம்  முறையான தண்டனை வழங்காமையும் ஒரே  பிரதேசத்தில்; அளவுக்கு அதிகமாக பார்களை

நடாத்த அனுமதி வழங்கியமையும் தோட்ட தொழிலாளர்களின் மது பாவனை அதிகரிக்க காரணமாக இருந்து வருகின்றது. மலையக தோட்ட புறங்களில் சட்ட விரோத மது உற்பத்திகளையும் மது

பாவனையையும் இல்லாதொழிக்க வேண்டுமானால் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும். அதன் பலயீனம் பெருந்தோட்ட மக்களை பாதிப்படைய செய்கின்றது.

தற்போது சில தோட்டக்குடியிருப்புகள் தோரும் சட்டவிரோதமான முறையில் தற்போதும் மதுபானம் விற்கப்படுகின்றது. தோட்டத்தொழிலாளர்களின் தாழ்நிலை வருமானத்தில் குறைந்த

விலையில் நிறைந்த பயணை அடையக் கூடிய மது வகைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் உடல் நலத்தையும் பாதித்து வருகின்றது. இவ்வாறான சட்ட விரோத மது உற்பத்திகள்

மலையக தோட்ட புறங்களில் மாத்திரம் நடைபெறவில்லை ஆங்காங்கே அனைத்து பிரதேசங்களிளும் நடைபெற்று

வருகின்றது. இதனை இல்லாதொழிக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும். மது ஒழிப்பிற்கான ஜனாதிபதியின் செயற்திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும்.

    Leave a Reply