மலையகத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி photo

Spread the love

மலையகத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி

கிரிகெட் சுற்று போட்டி

“ஒற்றுமையே எமது பலம்”

இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன

இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையே எமது பலம் என்று கூறுகின்றார் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன அவர்கள்

புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி கல்லூரியில் கடந்த காலங்களில் கல்வி பயின்ற பழைய மாணவர்களை ஒன்றினைத்து 11 பேர் கொண்ட 16 அணிகள் உறுவாக்கபட்டு குறித்த அணிகளுக்கு இடையில் கிரிகெட் மென்பந்து சுற்றுப்போட்டி 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் எஸ்.சந்திரமோகன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எம். கவாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்போட்டியை கடந்த 16.04.2021 ஆம் திகதி கிராமிய

வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள்இ நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபட்டது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்.

இன்று நம் நாட்டில் மக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக இனம் மதம் மொழி சாதி அரசியல் தோட்டம் ஊர் ரீதயாக பிரிக்கபட்டே இருக்கின்றோம். இது இந்த நாட்டுக்கும் எமக்கும் எமது சமூகத்திற்கும் உகந்த ஒன்று அல்ல நாம் இளைஞர்கள் என்ற ரீதியில் ஒன்றுமையாக இருந்து எமது

சமூகத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். இதற்கு இந்த கிரிகெட் போட்டி ஒரு நல்ல சந்தர்ப்பம். இதில் எப்படி ஒன்றுமையாக இருக்கின்றோமோ அதேபோல் நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் இங்கு கட்சி அரசியல் ரீதியாக வரவில்லை. உங்களில் ஒருவனாகவே

வந்திருக்கின்றேன். ஒற்றுமையே எமது பலம். இந்த பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஊடாக புணர்நிர்மானம் செய்ய இரண்டு

மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளேன். தொடர்ந்து இந்த பாடசாலையின் அபிவிருத்தியில் உங்களுடன் தோல் நிற்பேன் என்று கூறினார்

.

இந் நிகழ்வில் சமய பெரியார்கள் கல்வி அதிகாரிகள் பிரஜாசத்தி பணிப்பாளர் பாரத் அருள்சாமி அயல் பாடசாலைகளின் அதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட நலன் விரும்பிகள் கலந்துக் கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற இந்த கிரிகெட் சுற்றுபோட்டி 17.04.2021 மாலை முடிவுற்றது. இந்த போட்டியின் முதலாவது வெற்றி கின்ணத்தையும் பணப்பரிசையும் 2014 ஆம் கல்வி பயின்ற

பழைய மாணவர் அணி வெற்றிக் கொண்டதுடன் இரண்டாம் இடத்தை 2009 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர் அணியும் மூன்றாம் இடத்தை 2010 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர் அணியும் பெற்றுக் கொண்டது

கிரிகெட் சுற்று போட்டி

கிரிகெட் சுற்று போட்டி

    Leave a Reply