மலசல கூடத்தில் ரிச்சார்ட் பதியுதீன் செய்த வேலை

Spread the love

மலசல கூடத்தில் ரிச்சார்ட் பதியுதீன் செய்த வேலை

இயற்கை உபாதைகளை கழிப்பதற்காகவே பலரும் மலசலக்கூடத்தை பயன்படுத்துவர். ஆனால், கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மலசலக்கூடத்திலிருந்து என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் ​செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்குள்ள மலசலக்கூடத்திலிருந்து இரகசியமாக செய்த விவகாரமே இப்போது அம்பலமாகியுள்ளது.

வைத்தியர்களால் அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒளடதங்களை (குளிசைகளை) குடிக்காமல், மலசலக்கூடத்துக்குச் சென்று, அங்கிருக்கும் துளைகளின் ஊடாக அவர், வெளியில் வீசியெறிந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தனக்கு வழங்கப்படும் குளிசைகளை, கடதாசிகளால் சுற்றிக்கொள்ளும் ரிசாட் பதியூதீன், இவ்வாறு வீசியெறிந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தடுப்புக்காவலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில், நோய்வாய்பட்டுவிட்டதாக கூறியதால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சிறுமி, எரிகாயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த நாளன்றே, அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தன்னை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துக்கொள்வதற்கான அனுமதியை, கோரியிருந்த போதிலும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சைகளைப் பெற்றுக்​கொண்டதன் பின்னர், அவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்றையதினம் (24) அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மலசலக்கூடத்துக்கு வெளியே வீசியெறியப்பட்ட குளிசைகள், ரிசாத் பதியூதீனுக்கு வழங்கப்பட்டவை என்பதை, அவரை கண்காணித்த வைத்தியரும் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply