மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
Spread the love

மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என்று 2021 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களை

கருத்தில் கொண்டு ,மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏழு ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஆர்.குருசிங்க ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது

குற்றவாளிக்கு மரண தண்டனையை வழங்குவது 53வது பிரிவின் விதிகள் மீறல் என குறிப்பிட்டுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி கிரிக்கெட் ஸ்டம்பினால் தாக்கி மற்றுமொரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இரத்தினபுரி

உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

கொலை செய்த காரணத்தினால் குறித்த சிறுவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக குற்றவாளியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்புவினால், குற்றவியல் சட்டத்தின் 2021 ஆம் ஆண்டின் 25 ஆம் எண்

சட்டத்தால் திருத்தப்பட்ட 53 வது பிரிவின் படி (in terms of section 53 of the Penal Code.
Section 53 of the Penal Code was amended by Act No. 25 of 2021) குற்றம் சாட்டப்படும் போது அவருக்கு 15 வயது மட்டுமே இருக்கும் என்றும், மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கக் கூடாது எனவும் வாதிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் அனைத்து காரணிகளையும் (Mitigating factors) கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல்

சிறை தண்டனை விதித்தது, இது 2018 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட
திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.