மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

Spread the love

மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

மம்தா பானர்ஜியின் நீண்ட கால உதவியாளராக இருந்த சுவேந்து அதிகாரி திடீரென பா.ஜனதா கட்சிக்கு தாவினார். அவருக்கு நந்திகிராமில் போட்டியிட பா.ஜனதா சீட் வழங்கியது.

மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்
மம்தா பானர்ஜி

மேற்குவங்காள மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். ஆனால் இந்த தடவை அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.

மம்தா பானர்ஜியின் நீண்ட கால உதவியாளராக இருந்த சுவேந்து அதிகாரி திடீரென பா.ஜனதா கட்சிக்கு தாவினார். அவருக்கு நந்திகிராமில் போட்டியிட பா.ஜனதா சீட் வழங்கியது.

தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜிக்கு சவால் விட்டார். இதை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால் அவர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தேர்தல் முறைகேடு காரணமாகத்தான் தோல்வி அடைந்ததாக மம்தா பானர்ஜி கூறினார். எனவே சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மம்தா பானர்ஜி

இந்த வழக்கு நீதிபதி கவுசிக் சந்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கை நீதிபதி கவுசிக் சந்தா விசாரிக்க மம்தா எதிர்ப்பு தெரிவித்தார்.

நீதிபதி கவுசிக் சந்தா பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். இதனால் எனக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே அவர் இந்த வழக்கை விசாரிக்கக்

கூடாது. வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று மம்தா, ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இன்று நீதிபதி கவுசிக் சந்தா தேர்தல் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது, ‘‘என் மீது தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இதன் மூலம் நீதித்துறையை இருட்டில் தள்ள

முயற்சிக்கிறார்கள். இந்த வழக்கை நான் விசாரிக்க முடியாது. எனவே இதில் இருந்து விலகிக்கொள்கிறேன். அதே நேரத்தில் நீதித்துறை பற்றி தவறான கருத்துக்களை கூறிய மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறேன்’’ என்று கூறினார்.

எனவே மம்தா பானர்ஜி அபராதத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி ஒருவர் மாநில முதல்-மந்திரிக்கே அபராதம் விதித்து இருப்பது ஆச்சரியமான வி‌ஷயமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply