மண் சரிவு எச்சரிக்கை

மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
Spread the love

மண் சரிவு எச்சரிக்கை

தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த நிலை தொடர்நதும் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் சிரேஷ்ட புவியியல் விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் அறிவிக்கப்பட்டிருந்த அனர்த்த எச்சரிக்கை நேற்று (27) இரவு 9.00 மணி தொடக்கம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு எச்சரிக்கை

இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில் பாத்ததும்பர, உடுநுவர, கங்க இயல கோரல, பாத்த ஹேவாஹெட்ட, கங்கவட்ட கோரல, அக்குரண ஹரிஷ்பத்துவ, தும்பனே, பூஜாப்பிட்டி மற்றும் யட்டிநுவர ஆகிய பிரதேச செயலாளர்

பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, ரம்புக்கண, மாவனெல்லை, புலத்கோப்பிட்டி, கேகாலை, அரநாயக்க மற்றும்

ருவான்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, பொல்காவலை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை

மாவட்டத்தில் ரத்தொட்ட, மாத்தளை, யட்டவத்த, உக்குவெல்ல, நாவுல, லக்கல, பல்லேகம மற்றும் பல்லேகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,


நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No posts found.