மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
Spread the love

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோல், ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை, மொரலிய ஒய பிரதேசத்தில் 114.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மழையுடன் புளத்சிங்கள சிறிய ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பரகொட, நாலியத்த, தம்பல போன்ற பிரதேசங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக புளத்சிங்கள மோல்காவ பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக புளத்சிங்கள ஹல்வதுர தமிழ் வித்தியாலயம் , பரகொட கிதுலேகொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் இஹலவெல்கம கனிஷ்ட வித்தியாலயம் இன்றும் மூடப்பட்டுள்ளன