மட்டக்களப்பில் 6 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை – மக்கள் நடமாட்டம் முடக்கம்

Spread the love

மட்டக்களப்பில் 6 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை – மக்கள் நடமாட்டம் முடக்கம்

கிழக்கு மாகாணத்தில் 6 பிரதேசங்கள், கொரோனா சிவப்பு வலயங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என கிழக்கு

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி, மட்டக்களப்பு – திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய

6 சுகாதார பிரிவுகளே, இவ்வாறு சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, தீகவாபி

ஆகிய கிராமங்களில் இதுவரை 87 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், 02 மரணங்கள்

நிகழ்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அப்பிரிவின் வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன், கொரோனா தொற்று சிவப்பு எச்சரிக்கை வலயமாக அட்டாளைச்சேனை

பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையால், பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தினார்.

Leave a Reply