மட்டக்களப்பில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேர் தனிமைப்படுத்தலில்

Spread the love

மட்டக்களப்பில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேர் தனிமைப்படுத்தலில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேரிற்கு விடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று என மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதியானவர்கள் மாவட்டத்தில் 35 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதில் கொறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 31பேரும் வெல்லாவெளி பட்டிப்பளை களுவாஞ்சிக்குடி ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவில் தலா ஒருவர் என அடையாளம் கானப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா நோய் தொற்றுகாரனமாக தொழில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான 5000.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை

வழங்குவதற்கான நிதியினை அரசாங்க அதிபரின் துரித நடவடிக்கையினால் திறைசேரியின் செயலாளர்

எஸ்.ஆர்.ஆட்டிக்கலவினால் உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுக்கு நேற்று முதல் உலர் உணவுப்பொதிகளை வழங்குவதற்கு அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.

உலர் உணவு பொருட்களை வழங்கும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எதிர்காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களில் தொழில் நிமிர்த்தம் சென்று வந்தவர்களாகவே உள்ளனர்.

இவர்களுக்கான மருத்துவ உதவிகளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் கண்காணிப்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்படுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply