மட்டக்களப்பில் டெல்டா

Spread the love

இலங்கை

மட்டக்களப்பில் டெல்டா

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொற்றும் வீதம் அதிகமாகவும் மரண வீதம் அதிகமாக ஏற்படுத்தக்கூடியது எனவும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 274 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியில் 56 பேரும், களுவாஞ்சிகுடியில் 47 பேரும், செங்கலடியில் 48 பேரும், வவுணதீவில் 27பேரும், வெல்லாவெளியில் 28 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மரணமடைந்தவர்களில் மட்டக்களப்பில் மூவரும், களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர், வவுணதீவு, வெல்லாவெளி, ஆரையம்பதி பகுதிகளில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 211 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

கடந்த வாரத்தில் 1982 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 36 பேர் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சராசரியாக 300 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவதுடன் சராசரியாக ஐந்து மரணங்களும் நிகழ்கின்றன.

நேற்று மருத்து ஆராய்ச்சி நிறுவகத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையின்படி முதன்முறையாக டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

அல்பா திரிபு மட்டுமே மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்டிருந்தது. அல்பா திரிபுடன் ஒப்பிடும்போது டெல்டா திரிபு தொற்றும் தன்மை அதிகமாகவும் மரண வீதம் அதிகமாகவும் காணப்படுகின்றது.

பொதுமக்கள் வீட்டில் இருப்பதன் மூலமே கொவிட் தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுடியும். அத்துடன் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும்.

தடுப்பூசியைப் பொறுத்தவரையில் முதல் தடுப்பூசி 270,000வரையில் ஏற்றப்பட்டுள்ளது.

30வயதுக்கு மேற்பட்ட 92 வீதமானவர்களுக்கு முதலாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 30 வயதுக்கு மேற்பட்ட 108,000 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. 37 சதவீதமான மக்களை உள்ளடங்குகின்றனர்.

இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு 115,000 வரையான தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன. நாளை இன்னும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன என்றார்.

Leave a Reply