தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கூட்டம் இல்லை என அறிவித்து விட்டு இரகசியமாக கூட்டம் நடத்திய சத்தியலிங்கம்

Spread the love

தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கூட்டம் இல்லை என அறிவித்து விட்டு இரகசியமாக கூட்டம் நடத்திய சத்தியலிங்கம்

வவுனியாவில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கு கூட்டம் ஒன்று நடைபெறவிருந்த நிலையில், இன்று கூட்டம் நடைபெறாது

என வேட்பாளர்களுக்கு தெரியப்படுத்தி விட்டு தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கூட்டம் நடத்தியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

குறிப்பாக தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பிரசன்னத்துடன் வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி

அலுவலகத்தில் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு ஒன்று ஏற்பாடாகியிருந்தது. குறித்த சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொள்வதை முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்திருந்தார். இதனையடுத்து கூட்டம் நடைபெறாது என அனைத்து

வேட்பாளர்களுக்கும் தெரியப்படுத்தி விட்டு, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தமிழரசுக் கடடசியின் வவுனியா கிளையினரை அழைத்து கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இதில் மாவை சேனாதிராஜாவும், எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

ஏனைய தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை புறக்கணித்து வவுனியா கிளையை அழைத்து கூட்டத்தை கூட்டியமை வடமாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்கள் தனித்து தேர்தல் பிரச்சார

நடவடிக்கையில் ஈடுபட முனைப்பு காட்டுவதையும், கூட்டமைப்பு வேட்பாளர்கள் மத்தியில் குத்து வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளதையும்

வெளிப்படுத்துவதாக தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலுக்கு தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

      Leave a Reply