பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
Spread the love

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

சைபர் மோசடிகளில் ஏராளமானோர் பணத்தை இழப்பது குறித்து நாம் ஏற்கெனவே ஏராளமான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற மோசடிகளில் இது மிகவும் விநோதமானது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் மங்கேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஃபேஸ்புக்கில் இருந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ​​”அனைத்திந்திய கர்ப்பிணி வேலை சேவை” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு விளம்பர வீடியோவைக் கண்டார். அது அவரை ஈர்த்ததால், அதைப் பார்க்க முடிவு செய்தார்.

அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வேலை உண்மையிலுமே ஒரு அருமையான வேலையாகத் தோன்றியது. அதில் நிறைய பணம் மற்றும் பல்வேறு கவர்ச்சியான பொருட்கள் கிடைக்கும்.

அது என்ன வேலை? ஒரு பெண்ணை கர்ப்பமாக்குவது தான் அந்த வேலை. ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கினால் ஏராளமான வசதி வாய்ப்புகள் வந்து சேரும் என அந்த விளம்பர வீடியோ கூறியது.

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

நிச்சயமாக, அது உண்மையாக இருக்கும் என்று அவர் நம்பினார். இதுவரை, ஒரு திருமண அலங்கார நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 15,000 ரூபாய் ($180; £142) சம்பாதிக்கும் 33 வயதான அவர், ஏற்கனவே இந்த மோசடி செய்பவர்களிடம் 16,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்கிறார்கள்.

ஆனால் வட இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த மங்கேஷ் என்பவர் மட்டும் இந்த மோசடியில் சிக்கவில்லை. இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கின்றனர்.

பிகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள சைபர் செல் பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளர் கல்யாண் ஆனந்த் பிபிசியிடம் இது குறித்துப் பேசியபோது, பெரிய அளவிலான ஒரு மோசடியில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கு ஏமாந்தவர்கள் பெரிய அளவில் சம்பளம் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில் ஏமாற்றப்பட்டனர் என்றும் கூறினார்.

குழந்தை இல்லாத பெண்ணுடன் ஓட்டலில் இரவு நேரம் தங்கினால் பணம் தருவதாக அந்தக் கும்பல் ஏமாற்றியுள்ளது.

இதுவரை, அந்தக் குழுவைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் ஒரு பிரிண்டரை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் 18 பேரை தேடி வருகின்றனர்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கிறது.

“இந்தக் கும்பல் ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியதாக நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. ஒருவேளை அவமானம் காரணமாக யாரும் புகாரளிக்காமல் இருக்கலாம்,” என்று கல்யாண் ஆனந்த் விளக்கினார்.