புத்தர் சிலை மாயம்

Spread the love

மோடியின் தமிழ்நாடு பயணத்துக்காகக் மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவுப் பகுதியில் பெரிய புத்தர் சிலை வைக்கப்பட்டது. அந்தப் புத்தர் சிலையுடன்

இருபக்கமும் யானை சிலைகள் வைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் புத்தர் சிலை முன்பு புகைப்படங்களை எடுத்துவந்தனர்.

புத்தர் சிலை நிரந்தரமாக அங்கேயே வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார்.

புத்தர் சிலைக்கு 8 லட்சமும், யானை சிலைக்கு தலா 5 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், அந்தச் சிலைகளுக்கு உண்டான வாடகையைக் கூட பேரூராட்சி நிர்வாகம் சிற்பிகளுக்கு இதுவரை கொடுக்கவில்லை.

இதனால் புத்தர் சிலையின் உரிமையாளர் சிலையை நேற்று எடுத்துச் சென்றுவிட்டார். மேலும், யானை சிலைகளையும் அதன் உரிமையாளர் எடுத்துச்செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது…

Leave a Reply