புதிய கொரனோ மருத்துவமனை திறப்பு

Spread the love

புதிய கொரனோ மருத்துவமனை திறப்பு

பெலியத்த ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் – 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கொவிட் – 19 நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை

அளிக்கும் வகையில் குறித்த இடைநிலை பராமரிப்பு நிலையம் இராணுவத்தினரால் சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 100 நோயாளர்களை பராமரிப்பதற்கான சகல மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக 12வது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த நிர்மாண பணிகளில் 23

ஆவது கஜபா படைப்பிரிவு, மூன்றாவது தேசிய பாதுகாப்புப் படை மற்றும் 17வது பொறியியலாளர் சேவைகள் படையணி ஆகியவற்றின் படைவீரர்கள் ஈடுபட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் தென்மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர். சீஎல் குருகே, சுகாதார ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Leave a Reply