பிரிட்டிஸ் தேசியக் கொடிக்கு முள்ளிவாய்க்கால் நாளில் நடந்த அவமானம் PHOTO

Spread the love

நியூட்டனின் கையில் குரங்கின் கையில் சிக்கிய பூமாலை ஆகிய பிரிட்டிஸ் தேசியக் கொடி!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நிகழ்வில் எமது தேசியக் கொடியோடு பிரிட்டிஸ் தேசியக் கொடியையும் ஏற்றுவது சரியா என்று கேட்பவர்கள் இருக்கின்றார்கள்.

பிரிட்டிஸ்காரன்தான் எங்கடை யாழ்ப்பாண இராச்சியத்தை (வன்னிச் சிற்றரசுகளும், மாந்தை, திருகோணமலை, மட்டக்களப்பு, சிலாப அரசுகளும் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாகத் தான் போர்த்துக்கேயர் வரும் வரை இயங்கின) கோட்டை, கண்டி இராச்சியங்களோடு இணைத்துக் கடைசியில் எங்கடை நாட்டை சிங்களவனிடம் பிரிட்டிஸ்காரன் தாரைவார்த்துக் கொடுத்த கோபம் எங்கடை ஆட்களில் சிலருக்கு.

நியாயமான கோபம் தான்.

அடுத்தது மார்க்கிரட் தட்சரின் காலத்தில் கினி மினி நிறுவனம் ஊடாக சிங்கள இராணுவத்துக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் செய்த உதவிகள்.

அது போதாதென்று இயக்கத்தை ரொனி பிளேயரின் அரசாங்கம் தடை செய்தது.

எங்கடை ஆட்களின் கோபங்களில் நியாயம் உண்டு.

அதேநேரத்தில் பிரட்டிஸ் குடியுரிமையையும், விசாவையும் கோபிக்கும் எங்கடை ஆட்கள் கைவிட மாட்டீனம்.

அவையள் குளத்தோடு கோவிப்பீனம்.

ஆனால் அதே குளத்தில் தங்களின் பிட்டத்தைக் கழுவுவீனம்.

சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பிரிட்டிஸ் கொடி யாரின் கொடி?

அந்த நாட்டு மக்களின் கொடி.

பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் மீது எங்களுக்குக் கோபம் இருக்கலாம்.

ஆனால் பிரிட்டிஸ் மக்களைக் கோவிப்பதாலும், அவமதிப்பதாலும் நாம் எதை சாதிக்கப் போகிறோம்?

இன்று பிரிட்டனில் வாழும் ஒவ்வொரு தமிழர்களும் இலங்கையில் எமது மக்களுக்கு இருப்பதை விட அதிக உரிமைகளோடு, சுதந்திரத்தோடு வாழ்கிறார்கள்.

நாங்கள் எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பது தான் அண்ணையின் அறிவுறுத்தல்.

ஒன்றில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் பிரிட்டிஸ் கொடியை நாங்கள் ஏற்றாமல் விட வேண்டும்.

அப்படி இல்லை என்றால் பிரிட்டிஸ் கொடிக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் அதை நாங்கள் ஏற்ற வேண்டும்.

ஆனால் 18.05.2021 செவ்வாய்க்கிழமை பிரிட்டிஸ் பிரதமரின் வாசத்தலம் முன்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் பிரிட்டிஸ் கொடி தலை கீழாக ஏற்றப்பட்டது.

இந்தத் தலைகீழ் கொடியேற்றத்தை மேற்பார்வை செய்தவர் வாயால் ஆட்லறி அடிக்கும் பிரச்சாரப் பீரங்கி நியூட்டன்

பிரிட்டிஸ் கொடி ஏற்றி முடிந்ததும், அங்கு நின்ற செயற்பாட்டாளர் ஒருவரை அணுகிய பிரிட்டிஸ் காவல்துறைக் காவலர் ஒருவர், ‘The Union Jack is flying upside down’ என்று ஆங்கிலத்தில் கூறியிருக்கிறார்.

நின்ற செயற்பாட்டாளருக்கு Union Jack என்றால் பிரிட்டிஸ் தேசியக் கொடி என்று விளங்கவில்லை.

‘Yeah, yeah’ என்று சொல்லி விட்டு அந்த செயற்பாட்டாளர் நகர்ந்து விட்டார்.

பிரிட்டிஸ் கொடியேற்றத்தைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டுக் கொண்டிருந்ததால் அங்கு வந்த காவல்துறைக் காவலர் மேற்கொண்டு ஏதும் கூறாமல் பேசாமல் ஒதுங்கி நின்று விட்டார்.

ஆனால் தவறு சீர்செய்யப்படவில்லை.

திரும்பவும் வந்த காவல்துறைக் காவலர் விடயத்தை வேறு சில செயற்பாட்டாளர்களிடம் கூறியிருக்கிறார்.

அவர்கள் சிலர் ஓடி வந்து நியூட்டன் விசயத்தைக் கூறியிருக்கிறார்கள்.

‘எல்லாம் எங்களுக்குத் தெரியும், நீங்கள் அங்காலை போங்கோ’ என்று அவர்களை நியூட்டன் மாஸ்டர் எரிச்சலுடன் விரட்டியதை சேரமானின் ஆவியின் தூதர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கடைசியில் எதுவுமே நடைபெறவில்லை என்றதும், ‘Crazy people’ என்று திட்டி விட்டுக் குறித்த காவல்துறைக் காவலர் நகர்ந்து சென்றிருக்கிறார்.

தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த இனவழிப்பிற்கு பிரிட்டிஸ் மக்களிடமும், பிரிட்டிஸ் ஆட்சியாளர்களிடமும் நீதி கோரி நடத்தப்பட்ட நிகழ்வு கடைசியில் எமது மக்களை ‘பைத்தியக்காரக் கூட்டம்’ என்று பிரிட்டிஸ் காவல்துறையினர் கூறும் நிலையில் முடிந்திருக்கிறது.

இது எமது மக்களின் உரிமைப் போராட்டத்திற்குக் களங்கம் விளைவிக்கச் சிங்களக் கைக்கூலியான கிருஸ்ணடன் சேர்ந்து நியூட்டன் செய்த ஒரு திட்டமிட்ட சதிச் செயலா என்ற கேள்வி எழுகிறது.

நியூட்டன் மச்ச கிருஸ்ணன் இயக்கத்தின் தங்கங்களை சிங்கள அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்து விட்டு இலண்டன் வந்தவர்.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நிகழ்வு நடந்த இடம் பிரிட்டிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சிற்கு சொந்தமானது.

அந்த இடத்தில் பாதைகளை மறிப்பது போல் எம்மவர்கள் சிலர் நின்றிருக்கிறார்கள்.

அப்பொழுது அங்கு வந்த பிரிட்டிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சின் காவல்துறை அதிகாரிகள், ‘இது ஆயுதம் தாங்கிய காவல்துறையின் வந்து செல்லும் இடம். இங்கு வழி மறித்து இடையூறு ஏற்படுத்தாமல் உங்கள் நிகழ்வை நடத்துங்கள்’ என்று கூறி விட்டுப் போயிருக்கிறார்கள்.

இதே மாதிரி கொழும்பில் உள்ள சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் முன்னால் அல்லது டில்லியில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சின் முன்னால் நாங்கள் யாராவது செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்.

அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லுறவர், நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று.

அண்ணையின் அறிவுறுத்தலுக்குக் களங்கம் விளைவிக்கும் நியூட்டனின் செய்கை நியூட்டன் இந்திய – சிங்கள உளவு நிறுவனங்களில் கையாளா என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகின்றது.

சரி, முதலில் பிரிட்டிஸ் கொடி தலைகீழாகப் பறந்த படங்களை தருகிறேன்.

அவற்றின் கீழ் பிரிட்டிஸ் கொடி சரியாகப் பறக்க வேண்டிய முறையையும், உதாரணத்தையும் இணைக்கிறேன்.

நீங்களே பாருங்கள்.

இனியாவது குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்து எமது மக்களுக்குக் களங்கம் விளைவிக்காமல் விட்டால் சரி..

மேற்படி சம்பவம் தொடர்பில் உங்கள் கருத்துக்களை எமக்கு தெரிவித்தால் பகிர தயார்

    Leave a Reply