பிரிட்டனில் புலிகள் மீதான தடைக்கு நன்றி – இலங்கை அரசு

Spread the love

பிரிட்டனில் புலிகள் மீதான தடைக்கு நன்றி – இலங்கை அரசு

நியூசிலாந்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், இலங்கையின் அனைத்து புலனாய்வு பிரிவும் நியூசிலாந்தில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இதற்கான பணிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்துள்ளார் என்றார்.

சர்வதேச ரீதியில் தீவிரவாதம் மற்றும் அதன் தாக்கம் குறித்து தெளிவான அறிவை அனைத்து நாடுகளும் அறிந்துள்ளதாக தெரிவித்த அவர், தீவிரவாத செயற்பாட்டால் தெற்கு ஆசிய நாடுகள் மாத்திரமின்றி உலக நாடுகளையும் அழுத்தங்களுக்கு இட்டுச் சென்றுள்ளமைக்கு நியூசிலாந்தில் இடம்பெற்ற சம்பவம் சிறந்த உதாரணமாகும் என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் நேற்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை பிரித்தானியா நீக்காமைக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்த அவர், குறித்த தடையை நீக்குமாறு தொடர்ச்சியாக பல சக்திகள் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் பிரித்தானியா நீதிமன்றம் அக்கோரிக்கையை நிராகரித்து வருகின்றது.

போர் முடிந்தாலும் அரசியல் ரீதியான செயற்பாடு காரணமாகவே பிரித்தானியா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது என நினைக்கிறோம். இத்தீர்மானமானது ஏனைய நாடுகளுக்கு மிகச் சிறந்த உதாரணம் என்றார்.

இதேவேளை,இலங்கை தொடர்பில் பல்வேறு சக்திகள் போலியான பிம்பத்தை தோற்றுவித்து, பங்கம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை சர்வதேசத்தில் முன்னெடுத்து வருகின்றன.

இந் நிலையில், அவற்றை நீக்கி நாட்டின் யதார்த்த உண்மையை ஐரோப்பாவுக்கு முன்வைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக ஐரோப்பிய நாடுகளின் உயரிய மாநாட்டுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு விடுத்த அழைப்பை கருதுவதாகவும், இந்த மாநாட்டின் முதல் அமர்வில் பேசுவதற்கும் பிரதமருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


    Leave a Reply