பிரவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா

Spread the love

பிரவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா

முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்சனை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதை வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.

பிரவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா? இந்த ஹேர் பேக் போடுங்க…
ஹேர் பேக்
முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்னை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல்

பிரச்னை அதிகமாக இருக்கும். இதை எப்படி சமாளிக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புதுமையான புரோட்டீன் ஹேர் பேக் தயாரிக்க முடியும். அதை இப்பதிவில் பார்க்கலாமா…

புரோட்டீன் ரிச் ஹேர் பேக்

தேவையானவை

வாழைப்பழம் – 1 மீடியம் அளவு
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

இதையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து பேஸ்டாக்கி அதை முடியில் மண்டையின் வேர்கால்களில் நன்றாக தடவ வேண்டும்.

20 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு போட்டு கழுவலாம். கண்டிஷனர்கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுடுநீர், இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போட்டு கொள்ளலாம்.

பலன்கள்

முடி பிளவுகள் தடுக்கப்படும். முடி உதிர்தல் நிற்கும். முடிக்கு தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாகும்.

    Leave a Reply