பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு திறப்பது தள்ளி வைப்பு

Spread the love

பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு திறப்பது தள்ளி வைப்பு

பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளமை பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இருப்பினும் பொது மக்கள் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த சில வாரங்களாக பொது மக்கள் சுற்றுலாப்பயணங்களில் ஈடுபடவில்லை. தம்மைப்போன்று ஏனையோரின் சுகாதார பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நாடு திறக்கப்பட்டமை பொருளாதாரத்தைப் போன்று தமது வாழ்வாதார தேவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே ஆகும். இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கவில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

பொது தேர்தலை நடத்துவதைப் போன்று ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு நடைமுறையில் அதிகாரம் வழங்குவது மிக முக்கியமானதாகும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அநுராதபுரம், ,ராஜாங்கனை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற மரண நிகழ்வு மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தான நிகழ்வு சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை மீறிய வகையில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார்.

இதனூடாக இந்த பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக அனில் யாசிங்க தெரிவித்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய ஆலோசகர் ஊடாக ராஜாங்கனை பிரதேசத்தில் நடைபெற்ற தான நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தற்பொழுது இந்த பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் 12 பேர் பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடிக்காத இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு உள்ள சூழ்நிலைக்கு இது சிறந்த உதாரணமாகும் என்று தெரிவித்த வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் பொது மக்கள் தேவையற்ற வகையில் செயற்படுகின்றனர். இது தொடர்பில் பொது மக்கள் மீண்டு சிந்திப்பது மிக முக்கியமானதாகும்.

Leave a Reply