பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

Spread the love

பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றதனால் முதலாம் தவணையின் முதற்கட்டம் கடந்த மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்தது.

இன்று ஆரம்பமாகும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 8ஆம் திகதி நிறைவடையும். இரண்டாம் தவணை அடுத்த மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகும்.

கடந்த காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான நாட்களே பாடசாலை

நடைபெற்றது.இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரா நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டு பாடு நிலவியது

இதனால் பாடசாலைகள் பேரூந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்கள் என்பன இயங்கும் நிலையில் இருந்து செயலற்று போயின

மாணவர்கள் வரவு வீழ்ந்த நிலையில் பாடசாலைகளுக்கு இடைக்கால விடுமுறை

அறிவிப்பையும் கல்வி அமைச்சு விடுத்தது ,இவ்வாறு நீண்டு செல்லும் இலங்கை பொருளாதார நெருக்கடி அணைத்து தரப்பிலும் பாதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

நாள் தோறும் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் கல்வி கற்றல் செயல் பாடுகள் செயல் இழந்து போனதினால் மாணவர்கள் மத்தியில் அந்த கல்வியை உரிய முறையில் கற்று தேர்வு எழுதிட முடியாமல் போனது

இதனை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை மேகொண்டால்

மட்டுமே புதிய ஆளுமை உள்ள மாணவர் சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் ,கற்றவர்கள் எழுந்து வந்தாலே நாட்டை முன் நோக்கி நகர்த்த முடியும்

இதனை கல்வி அமைச்சின் அமைச்சர் உரிய முறையில் புரிந்து கொண்டால் மட்டுமே கல்வியால் கற்றல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி இலகு முறையில் கல்வியை மாணவர்கள் பெற்று கொள்ள வழி செய்யும்

இலங்கை மாணவர்கள் கற்றல் செயல் பாடுகளில் எழுச்சியுள்ளது என்ற தோற்றப்பாடு காண்பிக்க பட்டாலும் ,மேற்குலக மற்றும் தென் ஆசிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கல்வி அறிவில் பின்தங்கியுள்ள நிலையிலேயே காணப்படுகின்றனர்

இலங்கையின் கல்வி தரத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டை

முன்னோக்கிய நகர்த்தவும் ,மாணவர்கள் மத்தியில் எழுச்சிமிகு கற்றல் ஆர்வத்தை ஏற்படுத்திட கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க படும் விகிதம் முதன்மை பெறவேண்டும்

பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

அதற்கு அரச இயந்திரம் உரிய முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி சென்றால் மட்டுமே இலங்கை கல்வியில் மாற்றம் உள்ள புரட்சியை ஏற்படுத்த முடியும்

இலங்கையில் மட்டுமே மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக விடுமுறை வழங்க படுகிறது ,ஆனால் ஐரோப்பிய நாடுகளில் எட்டுவாரங்கள் மற்றும் ஆறுவரங்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்க படுகிறது

மாணவர்கள் சலிப்பு இன்றி கற்றலை தொடர்ந்திட இவ்வாறான உளவியல் ஊக்குவிப்பு வழங்க படுகிறது ,

இலங்கை பாடசாலைக்கும் மாணவர்கள் இவ்விதம் ஆரோக்கியமான கற்றலை மேற்கொள்ள இலங்கை கல்வியால் கட்டமைப்பில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் ஆவலாக உள்ளது – வன்னி மைந்தன் –

    Leave a Reply