நூலகங்களை திறந்து வைப்பதில் பிரயோசனமும் இல்லை-தவிசாளர் முபாறக் தெரிவிப்பு

நூலகங்களை திறந்து வைப்பதில் பிரயோசனமும் இல்லை-தவிசாளர் முபாறக் தெரிவிப்பு
Spread the love

நூலகங்களை திறந்து வைப்பதில் பிரயோசனமும் இல்லை-தவிசாளர் முபாறக் தெரிவிப்பு

கடந்த காலங்களில் நான் அனுப்பிய செய்திகளுக்கு “பைஷல் இஸ்மாயில்” என்ற பெயரை பாவித்து வந்தேன். தற்போது இந்தப் பெயரை மாற்றி “அபு அலா

” என்று இனிவரும் காலங்களில் பாவிக்கவுள்ளேன். எனவே, நான் அனுப்புகின்ற செய்திகளுக்கு இந்தப் பெயரை பதிவிடுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

நூலகங்களை பெயரளவில் திறந்து வைப்பதில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை; தவிசாளர் முபாறக் தெரிவிப்பு!

அபு அலா –

நூலகங்களை திறந்து வைப்பதில் பிரயோசனமும் இல்லை-தவிசாளர் முபாறக் தெரிவிப்பு

தேசிய வாசிப்பு வாரத்தையொட்டி குச்சவெளி வடலிக்குளம் பிரதேசத்தில் புதிய நூலகத்தை குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் பிரதம

அதிதியாக கலந்துகொண்டு திறத்து வைத்து பொதுமக்களிடம் கையளித்து வைத்தார்.

குச்சவெளி பிரதேச சபை செயலாளர் மா.மாலினி அசோக்குமார் தலைமையில் (31) இடம்பெற்ற இந்த திறப்பு விழாவில், உதவித் தவிசாளர்,

உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அங்கு தவிசாளர் ஏ.முபாறக் உரையாற்றுகையில்,

நூலகங்களை பெயரளவில் திறந்து வைப்பதில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை. அதனை முழுமையாக நாம் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

எம்மிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அது ஒரு மனிதனை பரிபூரணமாக்குகிறது.

மின்னணு ஊடகத்தின் ஆதிக்கம் இன்று அதிகரித்துள்ளதால் அச்சு ஊடகத்தின் பயன்பாட்டைக் குறைவடையச் செய்துள்ளது.

அதனால் எம்மிடையே புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றது.

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக உள்ளனர். ஏனென்றால், வீட்டில் புத்தகங்களை படிக்கும் பழக்கம்

அவர்களிடத்தில் இல்லாததால், பிள்ளைகளும் அப்படியே மாறிவிடுகின்றனா். இதிலிருந்து நாம் மீண்டுகொள்வதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை எம்மிடத்தில் ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.

இந்நிகழ்வின்போது, நூலக வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகளும் தவிசாளர்
உள்ளிட்ட அதிதிகளினால் நட்டிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.