நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Spread the love

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை

அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற, ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எல்லைகளுக்கு அப்பால் பிம்ஸ்டெக் (BIMSTEC) வலயத்தை அபிவிருத்தியடைந்த சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்த, அனைத்து பிம்ஸ்டெக் நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அழைப்பின் பேரில் இந்திய சுற்றுலா சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு “எல்லைகளைக் கடந்து – வாழ்வை மாற்றும்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை

இலங்கை பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம் என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்த நடத்தப்படும் இந்த மாநாட்டில், இந்திய சுற்றுலாப் பயண முகவர் சம்மேளத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்துகொண்டுள்ளன. இதில் செய்தி சேகரிப்பதற்காக சுமார் 50 இந்திய ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தமை விசேட அம்சமாகும்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் திருமதி. ஜோதி எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கூற வேண்டும். புதிய திட்டங்களின் ஊடாக இலங்கையை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுறுவேன் என நான் உறுதியளிக்கிறேன். அதற்காக எமது சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.

இந்த மாநாட்டிற்குப் பின்னர், இங்கு வருகை தந்துள்ள பலர் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள். திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தையும், கதிர்காமக் கந்தன் சன்னதியை தரிசிக்க தவறாமல் செல்ல வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆலயம் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. வலயத்தில் மிகப் பழைமையான ஆலயமொன்றாகும். சில நாட்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்தபோது பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் நல்லூருக்கு சென்று வருடாந்த உற்சவத்தை கண்டுகளிக்கலாம். மலைகளையும் மற்ற அழகிய இடங்களையும் நீங்கள் பார்த்திருந்தாலும், நான் இங்கு சொன்ன இடங்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

ஒகஸ்ட் மாதம் நல்லூர் திருவிழாவும் கண்டி பெரஹெராவும் நடைபெறுகின்றன. இது நமது கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிறப்பு சுற்றுலா ஈர்ப்புள்ள தலமாக இது திகழ்கிறது. காலி இலக்கிய விழா ஜனவரி மாதம் நடைபெறுகின்றது. தென்மாகாணத்தின் காலியிலுள்ள

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை

ஒவ்வொரு நகரத்திலும் தனித்துவமான திருவிழாக்கள் உள்ளன. ஹிரிகெட்டிய கடற்கரையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் டிஸ்கோடெக் நவீன ஜாஸ்

இசை என்பன பல இருக்கின்றன . மாத்தறையில் பல பாரம்பரிய இசைக் கச்சேரிகள் நடைபெறுவதுடன் ஜனவரி மாதம் கொழும்பில் ஆண்ட்ரியோ பொசெல்லியின் பாடலைக் கேட்கலாம்.

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கும் வகையில் கடனை மறுசீரமைக்க வேண்டும். சுற்றுலாத்துறை என்பது கடன் அல்லாத நிதியை திரட்டுவதற்கான ஒரு வழியாகும். எனவே அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இதனை 5 மில்லியனாக உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். ஒரு சுற்றுலா பயணி ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் 1000 டொலர்களை செலவழிக்கும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை உருவாக்க வேண்டும். தெற்காசிய நாடுகளில் மிகச்சிறிய மாலைத்தீவிலிருந்து சுற்றுலா பற்றி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் பல உள்ளன.

நுவரெலியாவை கொல்ப் விளையாட்டின் மையமாக மாற்றுவதற்கு மேலும் 7 கொல்ப் மைதானங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

பெரிய சுற்றுலா விடுதிகளை உருவாக்க வேண்டும். தெதுவ பிரதேசத்தை அண்மித்து, நீர்த்தேக்கத்திற்கு அண்டிய 1000 ஏக்கருக்கும் அதிகமான பகுதி, சுற்றுச் சூழலுக்கு உகந்த சுற்றுலாத் துறைக்குப் பொருத்தமான பகுதியாக அடையாளம் கண்டுள்ளோம்.

ஹோடன் சமவெளிக்கு அருகில் மேலும் 900 ஏக்கர் உள்ளது. பசுமை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் பங்களிப்பதன் மூலம் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

மேலும் பல இடங்களில் துடுப்புப் படகு சவாரி சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை

அண்மையில் சென்று வந்த எல்ல பயணத்தின் அற்புதமான அனுபவத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்தப் பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இன்னும் பல விடயங்களை செய்ய வேண்டும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதுடன், அதன் வருமானத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இலங்கை அதன் தனித்துவமான உணவு மற்றும் கலாச்சார துறைகளுடன் ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக உலகிற்கு காண்பிக்க முடியும்.

கிழக்கு மாகாணத்தை சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். அங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க

விரும்பினால் அதற்கான வசதிகளை செய்துதர தயாராக உள்ளோம். அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரையின் அழகை நீங்கள் அனுபவிக்க முடியும்.

இந்த சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் சட்டங்களை மாற்றுவது அவசியம். சுற்றுலாத் துறை மூலம் அதிக வருமானம் பெறுவதன்

மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். சுற்றுலாத் துறை தொடர்பான இந்தத் திட்டங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.