நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள்

Spread the love

நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள்

தமிழகத்தில் சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருவதால், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று

தமிழக நோய் தொற்று மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

மக்கள் தொடர்ந்து பொது இடங்களில் கூடினால் கொரோாவை கட்டுப்படுத்துவது கடினம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

நாளுக்கு நாள் அதிகரித்து, தினமும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தோரின்

எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் முக்கியமாக கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில்

கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அனைத்து மாவட்டத்திற்கும் சேர்த்து சென்னையில் மட்டும்

நாளொன்றுக்கு 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதற்கமைய சென்னை தற்போது அதிகபட்சமாக 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில்

நோய் அதிகம் பரவுவதற்கான காரணம் என்னவென்று நோய் தொற்று பிரிவு மூத்த மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன்

கூறியதாவது: சென்னையில் முதலில், நோய் தொற்று தொடங்கியதே விமான நிலையங்களில்தான். ஏன் என்றால்

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்கள் வழியாகத்தான்

வந்தார்கள். எனவே சென்னை போன்ற பெருநகரங்களில் பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும். இரண்டாவதுஇ மக்கள் தொகை, ஒரு

சதுர கிலோமீட்டருக்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை பொறுத்தே பரவல் இருக்கிறது. இது கிராமப்புறத்தில் குறைவு. அதனால் அங்கே பரவல் குறைவாக இருக்கும்.

இப்போது 4 நாட்கள் முழு ஊரடங்கு என்றதும், மக்கள் சனிக்கிழமை எல்லாம் ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாக கூடினார்கள். அதனால்,

முழு ஊரடங்கு அறிவித்ததற்கான பலனே இல்லாமல் போனதுபோல் ஆகிவிட்டது. இந்த வியாதி ஒரு நபருக்கு வந்தால் , 2 வாரத்திற்கு

பிறகுதான் தெரியும். இந்த வாரம் சனிக்கிழமை கூடியவர்களில் யார் யாருக்கு பரவியது என்று இரண்டு வாரங்களுக்கு பிறகுதான்

      தெரியும். இப்போது உறுதி செய்யப்பட்டவர்கள், அறிவிக்கப்படுபவர்கள் எல்லாம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு

      பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள்தான். எனவே இந்த கூட்டத்தில் குவிந்தவர்கள் எல்லோரின் நிலை என்னவென்று அடுத்த

      வாரம்தான் தெரிய வரும். நகர்ப்புறத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். கிராமப்புறத்தை கட்டுப்படுத்திடலாம்.

      இந்த வைரஸ் சளி துளிகளால் வேகமாக பரவ கூடியது.சளிதுளியால் பரவும் வைரஸ்கள் மிக வேகமாக பரவும். மேலும் இந்த வைரஸ் நாம் இதுவரை சந்திக்காத ஒன்று. இதுக்கு மருந்தும் கிடையாதுஇ

      தடுப்பூசியும் கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது. சமூக விலகல் மட்டுமே ஒரே தீர்வு. காய்ச்சல், இருமல் இருப்பவர்களை சோதனை செய்கிறோம். ஆனால், எந்த அறிகுறியும் இல்லாமல்

      இந்த வைரஸ் வந்து செல்கிறது. ஆனால் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவினாலும், அவர்கள் முதியோர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோராக இருந்தால் பாதிப்பு ஒன்றாகத்தான் இருக்கும்.

      தற்போது சென்னையில் கொரோனா பரவுவதற்கு நம்முடைய வாழ்க்கை வழிமுறையை முதலில் மாற்றியாக வேண்டும். ஊரடங்கு சரி, இருந்தாலும் அதை நீண்ட நாட்கள் நீட்டிக்க முடியாது.

      எனவே, பழைய காலத்தில் கூறியபடி, கை கால்களை கழுவ வேண்டும். நெருக்கமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் தள்ளியே நிற்க வேண்டும். சில நல்ல விஷயங்களை

      கற்றுக்கொள்ள வேண்டும். இருமல்இ சளி இருந்தால் வீட்டில் இருக்க வேண்டும். புது இடங்களுக்கு செல்லக்கூடாது. முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் நல்ல பழக்கங்கள்இ

      நல்ல பழக்கங்களை இனி நாம் கற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் பொது இடங்களில் கூடுவதை

      தவிர்க்க வேண்டும். முக்கியமாக முதியோர்இ உடல்நிலை பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டும். மருந்து ஏதும் இல்லாத

      நிலையில் சமூக விலகலே தீர்வாகும் என்று தமிழக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

      நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள் ழைய காலத்தில் கூறியபடி, கை கால்களை கழுவ வேண்டும். நெருக்கமாக நிற்பதை தவிர்க்க
      நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள் ழைய காலத்தில் கூறியபடி, கை கால்களை கழுவ வேண்டும். நெருக்கமாக நிற்பதை தவிர்க்க

          Leave a Reply