நாடு முழுவதும் இன்று ஊரடங்கு – வீதி தடைகளும் நடமாடும் ரோந்து

Spread the love

நாடு முழுவதும் இன்று ஊரடங்கு – வீதி தடைகளும் நடமாடும் ரோந்து

நாடு முழுவதும் இன்று (31) ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு

நாளை (01 ) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை மாத்திரமே அமுலிலிருக்கும்..

அதேபோன்று, எதிர்வரும் ஜூன் 04 மற்றும் பொசன் நோன்மதி தினமான 05 ஆம் திகதிகளிலும் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைவாக ஜூன் 03 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு 06 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை

அமுலிலிருக்கும். நாளை ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று,

தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும.

இன்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங’கு சட்டம் அமுல்படுத்தப்படுவதினால், அனைத்து மாவட்டங்களிலும்

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகள்

தடைசெய்யப்பட்டிருப்பதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

      Leave a Reply