சிறிய காரை உருவாக்கிய தமிழ் வாலிபனுக்கு -பிரான்ஸ் முரசுமோட்டை ஒன்றியம் உதவி -photo

Spread the love

சிறிய காரை உருவாக்கிய தமிழ் வாலிபனுக்கு -பிரான்ஸ் முரசுமோட்டை ஒன்றியம் உதவி -photo

முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்சின் ஏற்பாட்டில் இன்று (30/05/2020) பரந்தன் பகுதியில் வசிக்கும் இளைஞன் அருள்தாஸ்

ரொசானின் புதிய உள்ளூர் உற்பத்தியை பயன் படுத்தி உருவாக்கிய மோட்டார் மகிழுந்து ஊர்த்தி கண்டுபிடிப்பு திறமையைப் பாராட்டி

அவரின் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக நடைபெற்ற 75000/= எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .

இதில் கலந்து கொண்ட எமது கிராமத்தைச் சேர்ந்தவரும் பரந்தன் பகுதி கிராம சேவகருமானத. நந்தகுமார் அவர்களுக்கும்.
எமது ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய ப.பாஸ்கரன்(பாசி)

க.அனுசாந்த், வி.சாந்தன். மற்றும் ஏமது ஒன்றிய தீவிர நலம் விரும்பிகள் ச.கிருபா.


ம.கிருபா மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முரசுமோட்டை பரந்தன் பகுதி மக்களுக்கும். இத் திட்டத்துக்கு நிதி உதவி வழங்கிய

பிரான்ஸ் வாழ் முரசுமோட்டை உறவுகளுக்கும் ஒன்றியம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மேலும் இத் திட்டத்தை பரந்தன் பகுதியில் நடை முறை படுத்த பல வழிகளில் உதவி புரிந்த வரதன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

எமது கிராமத்தை கடந்தும் திறமையுடயவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்கப் படுத்துவதில் எப்பொழுதும் எமது கிராம மக்களும் ,முரசுமோட்டை மக்கள் ஒன்றியமும் பின் நின்றதில்லை

இந்த தமிழ் இளம் கண்டு பிடிப்பாளனுக்கு உரிய நேரத்தில் உதவியதை எண்ணி பிரான்ஸ் பெருமை கொள்கின்றது.


மேலும் முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் தனது சேவையின் எல்லையை விரிவு படுத்தி வீறு நடைபோட தோள் கொடுத்த

அனைத்து உறவுகளுக்கும் மீண்டும் ஒரு முறை, சிரம் தாழ்ந்த நன்றி களையும் .பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் ,

தொடரட்டும் உங்கள் பணி ,சிறக்கட்டும் எம் தமிழ் தேசம் ,

நன்றி
கவுரவ செயலாளர்,
முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்

சிறிய காரை உருவாக்கிய
சிறிய காரை உருவாக்கிய

      Leave a Reply