நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து

Spread the love

நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து

வேலூர் சிறையில் சிறை விதிகளை மீறிய புகாரில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி

நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றார். சக கைதியுடன் ஏற்பட்ட

வாக்குவாதத்தால் அறையில் துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில் நளினியின், தாயார் பத்மா சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதினார். அதில் கொலை வழக்கு தொடர்பாக சிறையில்

உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் சிறை விதிகளை மீறிய புகாரில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு

மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் நளினிக்கு பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட

சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சக கைதி, வார்டனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நளினி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply