தோட்ட தொழிலாளர்கள் இறந்தால் உடலை நல்லடக்கம் செய்வதற்கு கூட இடமில்லை

Spread the love

தோட்ட தொழிலாளர்கள் இறந்தால் உடலை நல்லடக்கம்
செய்வதற்கு கூட இடமில்லை

மலையக தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவது யாபரும் அறிந்த விடயம். ஒருவர் இறந்தால் தனக்கு ஆறு அடி நிலமே

சொந்தம் என்றும் கூறுவர் ஆனால் அந்த ஆறு அடி இடம் கூட சொந்தம் இல்லாமல் பாதையில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் இடம்

அதாவது தோட்டம் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவில் காணப்படுகின்றது.

இந்த நல்லடக்க பூமி கண்டி நுவரெலியா பிரதான பாதையின் அருகிலேயே காணப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் இவை முறையாக காணப்பட்ட போதும் கண்டி நுவரெலியா வீதி புணர்நிர்மானம் செய்யப்பட்ட போது பாதை அபிவிருத்திக்காக நல்லடக்க பூமி பாதைக்கு இறையானது.

இதனால் பெருபாலான கல்லரைகளும் புதை குழிகளும் மண் போட்டு மூடப்பட்டும் உள்ளன. இதற்கு ஒரு பொருத்தமான இடத்தினை பெற்றுக் கொள்வதற்கு தோட்ட

மக்களும் அரசியல் பிரமுகர்களும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்க் கொண்ட போதும் இதுவரை முயற்சிகள் கை கூடவில்லை.

இதனை பெற்றுக் கொடுப்பதில் தோட்ட நிர்வாகம் பல வருடங்களாக இலுத்தடிப்புகளை மேற் கொண்டு வருகின்றது. தற்போது காணப்படும் நல்லடக்க பூமி வீதி

அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாகும். மலையக தேயிலைக்கே உழைத்து தேயிலைக்கே உரமாகி கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இறந்தும்

நல்லடக்கம் செய்வதற்கு கூட ஒரு பொருத்தமான இடம் இல்லாதது வேதனைக்குறிய விடயமாகும். இதை உணர்ந்து

சம்பந்தபட்வர்கள் இவர்களுக்கான தீர்விணை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

தோட்ட தொழிலாளர்கள்

Leave a Reply